காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மாணவர்களுக்கான மூன்றாவது பரிசளிப்பு விழாவின்போது காத்தான்குடிக்கு சமய, சமூக ரீதியில் அளப்பரிய பணியாற்றிவரும் மூத்த உறுப்பினர்கள் இருவர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்தவகையில் காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம். அலியார் பலாஹி அவர்களும், சட்டத்தரணி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் BA, LLB . அவர்களும் தங்களின் அளப்பரிய சேவைகளுக்காக இவ்விழாவின்போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்த கௌரவங்களை காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் வழங்கி கௌரவித்தது.
இவர்களுக்கான கௌரவ நினைவுச் சின்னங்களை ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பாளர் அஷ்செய்ஹ் அல்ஹாஜ் ஏ.சி. அகார் முகம்மட் அவர்களும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி எஸ்.எஸ்.எம். இஸ்மாயீல் அவர்களும் வழங்கி கௌரவித்தனர்.

Leave a comment