உங்கள் தர்மத்தில் ஓர் வீட்டுத் தொகுதி….

-டீன் பைரூஸ்

இஸ்லாத்தில் உன்னதமான அமல்களில் ஒன்றான ‘ஸதகா’ விற்கு பல அந்தஸ்துக்களையும் முக்கியத்துவத்தையும் எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறிய விடயமாகும்.

கப்ரில் இருந்து சுவர்க்கத்தின் அந்தஸ்த்துக்கள் வரை நிலையான தர்மமாக ஸதகா எனும் தர்மங்கள் அமைகின்றன.

இந்தவகையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனனங்களின் சம்மேளனத்தின் ஏகோபித்த மசூராவின் அடிப்படையில் மக்களின் நன்கொடைகளைக் கொண்டு புதிய வீட்டுத் திட்டம் தற்பொழுது அமைக்கப்பட்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். எவ்வித பாரபட்சமுமின்றி வறுமையுள்ள குமர் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவும் குடும்பங்களுக்குமாக இவ்வீட்டுத்திட்டம் அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகின்றது.

எமது சகோதரர்களின் ஸதகா எனும் நன்கொடையின் மூலமாக அமைக்கப்பட்டுவரும்  இத்திட்டத்தால் எமது மண்ணுக்கு மென்மேலும் நல்ல பெயர்களும், புகழும் கிடைத்தவண்ணமிருக்கின்றன. இத்திட்டத்திற்கு உதவி புரிந்த/உதவிபுரிந்துவரும் அனைத்து உள்ளங்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

Published by

Leave a comment