தொடரும் காலநிலை மாற்றம்

– டீன் பைரூஸ்

இலங்கையில் தற்பொழுது காலநிலைமாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இத்தாழமுக்கத்தினால் கரையோரங்களிலும் ஏனைய இடங்களிலும் பலத்தமழையும், மண்சரிவுகளும் மற்றும் வெள்ள அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டள திணைக்களம் பொதுமக்களை எச்சரித்திருக்கின்றது.

கடலில் தாழமுக்கம் இருப்பதால் மீனவர்கள் தங்களது கடல் பயணத்தினை நிறுத்திக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 4000 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

காத்தான்குடியில் தொடர்ந்து 24 மணித்தியாலங்களாக மழை பெய்துகொண்டிருக்கின்றது. இதனால் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கின்றது. வீதிகளிலும் குறுக்கு ஒழுங்கைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கின்றன. மின் தடைகளும் தொடர்ந்து ஏற்படுகின்றன.

கடல் நிறம் மாறியுள்ளது. அலைகள் உயர்ந்தெழுகின்றன. அவ்வப்போது கடற்கரை வீதிவரைக்கும் கடல் அலைகள் வந்து செல்கின்றன.

இவ்வாறான நிகழ்வுகள் ஒவ்வொரு மாரி காலத்திலும் ஏற்படுவது வழக்கமே.

Published by

Leave a comment