கொழும்பு: குறிப்பாக இலங்கை 1980 களில் இருந்து உலகுக்கு தெரிய வருகிறது. அதுதான் இலங்கையில் இடம்பெற்றுவந்த உள்ளுர் மோதல்களால் இலங்கை உலக நாடுகளில் பிரபல்யம் அடைந்திருந்தது.
தினமும் கண்ணி வெடிகளிலும் யுத்தத்திலும் மடியும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பற்றி உலக பத்திரிகைகள் தினமும் செய்திகள் வெளியிட்டு வந்தன.
வெளிநாடுகளில் எம்மவர்களைப் பார்த்து வெளிநாட்டினர் ‘எந்த நாடு?’ என கேள்வி எழுப்பினால் இலங்கை என்போம். அவர்கள் கேட்கும் அடுத்த கேள்வி ‘தமிழ்?’
தழிழ் என்பது புலிகளைக் குறிக்கும் ஓர் இனம் என்பதை வெளிநாட்டினர்கள் புரிந்து வைத்திருந்த காலம்.
1996ம் ஆண்டு இலங்கை கிரிக்கட் உலகக் கிண்ணத்தை வெற்றி பெற்றதன் பின்னர் மீண்டும் இலங்கை உலகில் பிரபல்யம் அடைந்தது. ‘எந்த நாடு?’ என்று எங்களை வெளிநாட்டினர் கேட்டால் இலங்கை என்போம். அவர்களது அடுத்த சொல் கிரிக்கட்? ‘வேர்ல்ட் கப் வின்னர்ஸ்’? என்பதாக அமையும்.
1980களில் இருந்து பிரபல்யமடைந்து வந்த இலங்கை கிரிக்கட் உலகப் புகழ்பெற்ற பல வீரர்களை இலங்கை மண்ணில் விதைத்து உலகுக்கு அறுவடை செய்திருக்கின்றது.
அந்தவகையில் ரன்ஜன் மடுகல்ல, ரொசான் மகாநாம, அர்ஜூனா ரணதுங்க, சனத் ஜெயசூரிய மற்றும் முத்தையா முரளீதரன் போன்றவர்களை குறிப்பிட முடியும்.
இந்தவைகயில் மற்றுமொரு புகழடைந்து வரும் இலங்கை வீரர்தான் குமார் தர்மசேன.
இவரது முழுப்பெயர் ‘ஹன்துன்னெதிகே தீப்தி பிரியந்த குமார் தர்மசேன’ என்பதாகும். 24, ஏப்ரல் 1971ம் ஆண்டு கொழும்பில் பிறந்தார். தற்பொழுது 41 வயதில் அவர் இலங்கை கிரிக்கட்டிற்குச் செய்த தியாகத்தால் இந்த உயர்வை பெற்றிருக்கின்றார்.mj
ஆம். சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தினால் ஒவ்வொரு வருடமும் கௌரவிக்கப்படும் கிரிக்கட் விழாவில், 2012ம் ஆண்டின் சிறந்த மத்தியஸ்தராக கௌரவிக்கப்பட்டார்.
ஓர் பகுதிநேர விளையாட்டு வீரர் போல் அவ்வப்போது இலங்கை அணியில் விளையாடி வந்த குமார் தர்மசேன, தனது சிறந்த சுழல் பந்து வீச்சிலும் களத்தடுப்பிலும் இலங்கை அணியில் தனக்கான ஓர் இடத்தை பெற்றுக் கொண்டார். எதிரணியின் எந்த வீரர்களுடனும் சண்டை சச்சரவுகளுக்குப் போகாது, தான் உண்டு தன்பாடு என்று தனது 11 வருட கிரிக்கட் வாழ்க்கையில் பிரகாசித்திருந்தார்.
செப்டம்பர் 6, 1993ல் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, மார்ச் 8, 2004 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
1996 உலகக் கிண்ணத்தில் முகம்மட் அஸாருத்தீன் யின் விக்கட்டை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு ஓர் திருப்புமுணையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இலங்கையில் இடம்பெற்ற ஓர் போட்டியில் அன்று மத்தியஸ்தராக கடமையாற்றிய குமார் தர்மசேனவிடம் சனத் ஜயசூரிய 99 ஓட்டங்களை எடுத்திருந்தபோது எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழப்பு கோரப்பட்டது. ஆட்டமிழப்பை உணர்ந்த குமார் தர்மசேன தனது மத்தியஸ்தத்தின் நேர்மையை உணர்ந்து ஆட்டமிழப்பை வழங்கினார். இதனால் அன்று பல விமர்சணங்களுக்கு உள்ளாகி இருந்தார். அவரது நேர்மையால் இன்று சிறந்த மத்தியஸ்தர் விருதைப் பெற்று இலங்கையின் புகழை மென்மேலும் உலகுக்கு ஓங்கச் செய்திருக்கின்றார்.
மட்டையில் படாத ஓர் ஆட்டமிழப்பு, மட்டையில் பட்டுச் செல்லும் எல்.பி.டபிள்யு அப்பீள்கள், வீரர்களின் போலியான அப்பீள்கள் என்பற்றை தானும் ஓர் கிரிக்கட் வீரன் என்பதை உணர்ந்து புரிந்து கொள்கின்றார். தானும் ஓர் கிரிக்கட் வீரர் என்பதால் இவ்வாhறான போலியான ஆட்டமிழப்பு கோரிக்கைகளும் வீரர்களின் முகமாற்றங்களையும் உடன் அறிந்து கொள்கின்றார்.
இதன்காரணமாகவே இவரால் மென்மேலும் நடுநிலையான தீர்ப்புக்களை வழங்க முடிகின்றமை என்பதும் குறிப்பிடத்தக்க ஓர் விசேட அம்சமாகும்.
இவரைப் போல் புகழ்பெற்ற மத்தியஸ்தர்களாக விருது வழங்கப்பட்ட மத்தியஸ்தர்களான அலீம் தார், சைமன் டபள், பிள்ளி பௌடன் போன்ரோர் சர்வதேச கிரிக்கட்டில் விளையாடாதவர்கள். இவர்கள் கிரிக்கட்டை கற்று வந்தவர்கள். ஆனால் குமார் தர்மசேன அவர்கள் ஓர் வீரனாக இருந்து இன்று ஓர் மத்தியஸ்தராக செயற்படுவதே இவரது மத்தியஸ்தத்திற்குக் கிடைத்த ஓர் உயர் கௌரவமாக அமைகின்றது.
எனவே, இலங்கை யுத்தத்தால் அறிமுகமாகி, கிரிக்கட்டால் பிரபல்யமாகி இன்று ஓர் மத்தியஸ்தரால் புகழடைந்திருக்கிறது!
![Kumar Dharmasena[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/kumar-dharmasena1.jpg?w=262&h=300)
Leave a comment