காத்தான்குடி CIG யின் மூன்றாவது சான்றிதழ் வழங்கும் விழா: பிரதம பேச்சாளராக அகார் முகம்மட்

-டீன் பைரூஸ்

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மாணவர்களுக்கான மூன்றாவது சான்றிதழ் வழங்கும் விழா 28-10-2012 அன்றைய தினம் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் புதிய கட்டிடத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இவ்விழாவில் 65 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மிக விமர்சையாக இடம்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு பிரதான பேச்சாளராக ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பாளர் ஏ.சி. அகார் முகம்மட் அவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.

‘காத்தான்குடியிலிருந்து வருகை தந்து ஜாமியா நளீமிய்யாவில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சைகளில் 95%  அதிகமான புள்ளிகளைப் பரீட்சைகளில் எடுத்து வருகின்றனர்’  என்றும் அகார் முகம்மட் அவர்கள் கூறினார்.

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய நிர்வாகத்தினர்,  அதிதிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Published by

Leave a comment