காத்தான்குடி 6 ‘பஸ்மலா’ சதுக்கத்தில் இடம்பெற்றுவரும் ஹஜ் பெருநாள் பசார் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
நேற்றைய முதலாம் நாளில் அதிகளவான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடனும் சிறுவர்களுடனும் வருகை தந்திருந்தனர். மேலும் பல சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து பொருட்களை வாங்கி தங்களது பெருநாள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். வெளியூர்களில் இருந்தும் பலர் வந்ததைக் காணமுடிந்தது.
எனினும் குறிப்பிட்ட இடம் இவ்வாறான பெருநாள் பசார் நிகழ்வுக்கு போதாமையாக இருந்ததை பல பெற்றோர் சுட்டிக்காட்டியதுடன், அதிருப்தியும் அடைந்தனர். குறுகிய இடத்தினுள் கட்டுப்படுத்த முடியாத மக்களால் குழந்தைகளும் சிறுவர்களும் நசுங்குண்டனர்.
சுரங்கப்பாதை இரவு 8 மணிக்கு மூடிவிடுவதால் சிறுவர்கள் பிரதான வீதிகளை இரவு 8 மணிக்குப் பின்னர் கடந்து செல்வது ஆபத்தான ஓர் விடயமாக இருக்கின்றது. பொலிசார் உரிய இடத்தில் வீதிப் பாதுகாப்புக்கு நின்றாலும், சிறுவர்கள் தாங்கள் விரும்பிய இடத்தை கடப்பதற்கு முயற்சிக்கின்றனர். எனவே இதுவிடயமாக சம்பந்தப்பட்டவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

Leave a comment