ஹஜ்ஜுப் பெருநாள் சனிக்கிழமையாகும் : அ. இ. ஜ. உலமா அறிவிப்பு

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கடந்த 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவும், பெரிய பள்ளி வாசலும் இணைந்து எடுத்த முடிவின் பிரகாரம் இவ்வருடம் ஹஜ்ஜுப் பெருநாள் தினம் சனிக்கிழமையாகும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மீண்டும் அறிவித்துக்கொள்கிறது.

இவ்விடயத்தில் சில விஷமிகள் ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரை ஊடகங்களினூடாகப் பயன்படுத்தி சமூகத்தை தவறாக வழிநடத்த முற்படுவதாக ஜம்இய்ய த்துல் உலமாவுக்கு மக்கள் முறையிடுவதாக செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே ஜம்இய்யத்துல் உலமாவின் இம்முடிவை ஏற்று நடந்து இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சி யாகவும் தமது பெருநாளை கொண்டாட அ. இ. ஜ. உ. பிரார்த்திக்கிறது

Published by

Leave a comment