புனித ஹாஜிகளுக்கு வழங்கவென தமிழ் உட்பட பல மொழிகளில் மொழியுரை செய்யப்பட்ட இருபது இலட்சம் புனித குர்ஆன் பிரதிகள் ஹாஜிகளுக்கு வழங்கப்பட்டன. மதீனா நகரிலுள்ள மன்னர் பஹ்த் அச்சகத்தில் இக்குர்ஆன் பிரதிகள் அச்சிடப்பட்டன.
புனித குர்ஆன் பிரதிகளைவிட குர்ஆன் வசனங்களை உள்ளடக்கிய டேப்புகள், மார்க்க நூல்கள் ஆகியனவும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்டன. மினாவில் பெரும் எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரிகர்கள் கூடியுள்ளனர்.
கடும்வெப்ப காலநிலையில் மினாவில் கூடாரங்களுக்கு வெளி இடங்களிலும் வீதிகளிலும் ஹஜ் யாத்திரிகர்கள் நிரம்பி வழிகின்றனர். வாகனப் போக்குவரத்தும் நெரிசல்களும் அதிகளவில் காணப்படுகிறது.
– தினகரன்
Leave a comment