வண்ண மொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டுத் தாய்!
அங்கே நான்
விட்டெறியும் எழும்புக்கு
வாலாட்டும் நாய்!
எந்தப்பா சினிமாவில்
எடுபடமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்
என்தப்பா? நீா் சொல்லும்!
மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென்
பத்தினியாள் பசித்திருப்பாள்!
கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்
சிறியேன் அப்படியா?!
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
-கவிஞா் வாலி
![henandegg[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/henandegg1.jpg?w=223&h=173)
Leave a comment