-MJ
புனித ஹஜ் வணக்கத்தின் பிரதான நாளான அரபா தினம் எதிர்வரும் 25ம் திகதி வியாழக்கிழமை என சவுதி அரேபியா உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது.
இந்தவகையில் உலகில் உள்ள அத்தனை ஹாஜிகளும் இறைவனை நினைவுகூர்ந்து பாவமன்னிப்புக் கோரும் முக்கியமான நாளாகவும் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த நாளாகவும் அன்றைய நாள் அமைகின்றது.
இதன்படி மத்திய கிழக்கிலும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளிலுள்ள மக்கள் எதிர்வரும் 25ம் திகதி வியாழக்கிழமை பிரதான சுன்னத்தான அரபா தின நோன்பை நோற்று மறுநாள் 26ம் திகதி வெள்ளிக்கிழமை புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
இதனை மத்திய கிழக்கு ஊடகங்கள், கிழக்காசிய முஸ்லிம் ஊடகங்கள் மற்றும் பிரித்தானியாவின் இஸ்லாமிய அமைப்புக்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
Leave a comment