– எமது விஷேட செய்தியாளர்
கடந்த கிழக்கு மாகாணபை தேர்தலின் போது பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் இப்பகுதி மக்களுக்கு கூறப்பட்டதற்கிணங்க காத்தான்குடியின் முக்கிய இடங்களையும் வீதிகளையும் தொட்டுச்செல்லும் புதிய காத்தான்குடி கர்பலா வீதி தற்பொழுது நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வீதியை மேலும் அழகுபடுத்தும் முகமாக பலா மரங்களும் விலா மரங்களும் இவ்வீதி ஓரத்தில் நடப்படவிருக்கின்றன. அது மாத்திரமன்றி, பிரதான நகரங்களில் பல வீதிகளை ‘அவனியு’ (Avenue) என அழைப்பது போல் இவ்வீதியும் குறித்த பெயர் ஒன்று சூட்டப்பட்டு ‘அவனியூ’ என்ற புதுப் பெயருடன் புதுப் பொழிவு பெறும் எனவும் பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a comment