தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு வந்தால் முட்டுக் கட்டைகள் நீங்கும்
தேசிய இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம்கள் உள்வாங் கப்பட பாராளுமன்ற தெரிவுக்குழு வாய்ப்பாக அமையுமெனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழ் கூட்டமைப்பு பாராளு மன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதன் அவசியத்தையும் விளக்கினார்.
இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவர் கிaட் லொச்சென், நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (17) மாலை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது கூறியதாவது, விடுதலைப் புலிகளுடனான ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றினோம் இனப் பிரச்சினைகளு க்கான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களும் முக்கிய தரப்பு. முஸ்லிம்கள் தனியாக உள்வாங்கப்ப டாதது ஒரு பாரிய குறைபாடாகும். இக்குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டும் நீதித்துறையின் செயல்பாடுகள் பற்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து வரும் புதிய சட்டங்கள் மற்றும் திருத்தச் சட்டங்கள் பற்றியும் அமைச்சர் தூதுவருக்கு விளக்கினார்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படாதிருப்பது குறித்தும் அதுபற்றிய அமைச்சரினதும், அரசாங்கத்தி னதும் நிலைப்பாடு குறித்தும் இங்கு பேசப்பட்டது. மரண தண்டனை விவகாரம் உண்மை யிலேயே மிகவும் பாரதூரமாக நோக்கப்பட வேண்டியது. அது பற்றி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருடன் கலந்துரையாடியதையடுத்து அது பற்றிய ஆவணமொன்று அனுப்பிவைக் கப்பட்டுள்ளது. அந்த விடயத்தில் ஜனாதிபதியின் தீர்மானமே இறுதியானதாகும். மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் பலவருட காலங்களாக இருந்து வரும் கைதிகள் இடநெருக்கடி காரணமாக பற்றாக்குறை நிலவுவதாகவும் அமைச்சர் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார். ஆப்பானிஸ்தான் போன்ற நாடுகளில் யுத்த சூழ்நிலையில் பணியாற்றிய அனுபவம் தமக்கு இருப்பதாக தூதுவர் கிaட் லொச்சென் தெரிவித்தார்.
இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான ராஜதந்திர, பொருளாதார மற்றும் ஏனைய துறைகள் சார்ந்த நல்லுறவுகள் நீடிக்குமென அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் நம்பிக்கை வெளியிட்டார்.
–தினகரன்
Leave a comment