‘My Soft -2U’ நிறுவனத்தை கிழக்குமண்ணில் முன்னணி நிறுவனமாக கட்டியெழுப்ப வேண்டும்’ ஆறாவது ஆண்டு நிகழ்வில் – பிரதம அதிதி உரை.

– ‘My Soft -2U

இப் பிரதேசத்தில் சிறந்த, நீண்டகால திட்டமிடல்களுடன் பல்வேறு சவால்களைக் கடந்து ஆறாவது ஆண்டினை எட்டிப்பிடித்திருக்கும்’My Soft -2U’ நிறுவனமானது, தொழில் நுட்பத்துறையில் ஆற்றிவரும் பங்களிப்புக்களை அறியும்போது  ‘இதை கிழக்குமண்ணில் முன்னணி நிறுவனமாக கட்டியெழுப்ப நாம் எல்லோரும் உதவ வேண்டும்’

என்ற கோரிக்கையை நான் உங்கள் முன்வைப்பதோடு,  தானும் முடிந்தளவு உதவிசெய்யப் போவதாக நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற (18.10.2012)  ‘My Soft -2U’ நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆ. குணரட்னம் ஐயா அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவரது பெறுமதிவாய்ந்த சேவையைப் பாராட்டி ‘My Soft -2U’ நிறுவனம் சார்பாக அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்ட அப்துல் றஸ்ஸாக் மவ்லவி அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, ஞாபகார்த்த விருதும் வழங்கி வைக்கப் பட்டது.

மேலும்இ இந் நிகழ்வில் தற்போதைய மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் ளு.விஜயராஜா ஐயா அவர்களும் கலந்துகொண்டு  ‘My Soft -2U’ யில் பாடநெறிகளைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

அதேபோல் – அன்வர் வித்தியாலய அதிபர் ஜனாப். ILM. தாஸீம், ஓய்வுபெற்ற அதிபர் அல்ஹாஜ் செய்யது அஹமட் மாஸ்டர், முன்னாள் காழி நீதிபதி அல்ஹாஜ் MTM. காலித் தJP மற்றும் நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, ஆசிரியர் MHA. றசூல் Mphill (மத்திய கல்லூரி – தே.பா),  மற்றும் அல்ஹாஜ் A.L. டீன் பைறூஸ் JP (பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், மட் அல்அமீன் வித்தியாலயம்), சம்மேளன உறுப்பினர்  அல்ஹாஜ் MAAM.அப்துல் வதூத் JP உட்பட மேலும் பல பிரமுகர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இதில் சிறப்பு நிகழ்ச்சிகளாக – உடலில் ஊனம் இருந்தாலும் உள்ளம் நிறைந்த நம்பிக்கையுடன் அழகிய விளம்பர வடிவமைப்பு வேலைகளால் மக்கள் மனதை கொள்ளைகொண்ட ‘My Soft -2U’ யின் விஷேட பயிற்றுவிப்பை பெற்ற மாணவன் –  இளம் கிரபிக்ஸ் டிசைன் வடிவமைப்பாளர் MJM. றஸான் அவர்களால் சுயமாக வடிவமைக்கப்பட்ட இணையத்தளம் ஒன்று திறந்து வைக்கப்பட்டு ‘My Soft -2U’  யின் முகாமைத்துவ பணிப்பாளர் ACA. ஜிஹாக் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

அதேபோல், கிழக்குமாகாண முக்கிய தொடர்பு விபரங்களை உள்ளடக்கும் வெப் டிரக்டரி ஒன்றும் ‘My Soft -2U’ யின் நெட்வேர்க் பயிற்சி விரிவுரையாளரான G. சாம் கேதீஸ்BBA அவர்களால் திறந்து வைக்கப்பட்டு – அதுபற்றிய அறிமுகத்தை  ‘My Soft -2U’ யின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர்  KM. மஸாஹிம் அவர்களால் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மஹ்ரிப் தொழுகைக்கான இடைவேளையில் எஞ்சியிருந்தவர்களை அமைதிப்படுத்தும் வகையில் – இன்டர்நெட்டில் கூகுள் ஏர்த் மூலம் லன்டன், நிவ்யோர்க், போன்ற சிட்டிகளின் தெருக்களில் இறங்கி நடைபவணி வந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியதோடு – ‘My Soft -2U’ யினால் வடிவமைக்கப்பட்ட சில இணையத்தளங்கள் மற்றும் நட்பு இணையத்தளங்களின் அறிமுகங்களும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து கற்கை நெறியைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவுற்ற போதிலும் – தமது  சான்றிதழ்களில் பிழைகள் ஏற்படுவதை தவிர்க்குமுகமாக பெயர்களை உரிய நேரத்திற்குள் உறுதிப்படுத்த தவறியவர்களுக்கான சான்றிதழ்களை மேடையில் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்காக தமது ‘My Soft -2U’ நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதோடு – அவ்வாறானவர்கள் சனிக்கிழமை முதல் (20.10.2012) தமது சான்றிதழ்களை எமது அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று ‘My Soft -2U’ யின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர்  KM. மஸாஹிம் தெரிவித்தார்.

 

Published by

Leave a comment