– எமது விஷேட செய்தியாளர்
கடந்த நான்கு நாட்களாக காத்தான்குடி கடற்கரையில் கரையொதிங்கிவரும் உயிரிழந்த கடற்பிராணிகளின் புலால் துர்வாடைகளால் இரவு நேரங்களில் மனித இனமல்லாத வேறு இனத்தின் நடமாட்டங்கள் இப்பகுதிகளில் இருந்துவருவதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.
கெட்ட ஜின், செய்த்தான் போன்ற இனங்களின் நடமாட்டங்களை நேரடியாக சந்தித்தவர்கள் இச்சம்பவங்களின் பின்னர் தற்பொழுது காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதுவரை மூன்று சம்பவங்கள் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றிருக்கின்றன. நான்கு பேர் இச்சம்பவங்களை எதிர்நோக்கி இருந்தனர். இவர்களில் ஒரு சிறுவனும் தாயும் மற்றும் இருவர் பெரியவர்களுமாவர்.
யாராக இருப்பினும் தனித்து இப்பகுதியில் குறிப்பட்ட நாட்களுக்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் குறிப்பாக சிறுவர்களை இப்பகுதிகளுக்கு மாலை, இரவு வேலைகளில் அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர்.
காத்தான்குடியில் சுனாமி தாக்கிய காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் பல இடம்பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment