எமது விஷேட நிருபர்
நேற்று காத்தான்குடி கடற்கரையில் இறந்த நிலையில் கடல் உயிரினங்கள் பல கரை ஒதுங்கி இருந்தன. தரையில் வசிக்கும் ஜீவராசிகளைவிட பல கோடி அதிசயப் படைப்புக்கள் கடலுக்குள் இருக்கின்றன. இறை வேதமும் விஞ்ஞானமும் அதனை நிரூபித்து இருக்கின்றன.
இந்தவகையில் கடல் சிங்கம், கடல் ஆமை, கடல் பாம்புகள் என்று நாம் அறிந்தவை. நேற்று கடல் அமைகளும் மீன்களும் மற்றும் கடல் பாம்புகளும் உயிரற்று காத்தான்குடி கடற்கரையில் ஒதுங்கி இருந்தன. ஊர் மக்கள் உட்பட அதிகாரிகள் பலரும் இச்சம்பவங்களை நேரில் கண்டனர்.
இதற்கிடையில் கடற்கரையில் பாம்புகள் உயிரற்று ஒதுங்கி இருப்பதாகவும் நேற்று மக்கள் பதட்டப் பட்டனர். சென்றவருடம் கல்லடிப்பாலத்துக்கு கீழ் இவ்வாறான பாம்புகள் செல்வதாக மக்கள் சென்று பார்வையிட்டனர். எனினும் இதேபோல் அன்றும் இவைகள் பாம்பு அல்ல எனவும் மீனை ஒத்த கடல் பாம்புகள் எனவும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் தெரிவித்திருந்ததும் நாம் அறிந்த விடயம்.
இவ்வாறான கடற்பிராணிகள் திடீரென வெளியாகியமை குறித்து மக்கள் பெரிதும் அச்சம் கொண்டிருந்தனர். ஏதோ ஓர் அழிவு காத்திருப்பதாக மக்கள் ஊகித்தனர். அல்லது கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் இரசாயன பதார்த்தங்களின் கசிவு அல்லது ஒலுக்குகளால் அவை கடலில் பரவி அவை நஞ்சாக்கப்பட்டதால் இப்பிராணிகள் செத்து மடிந்து கரையொதிங்கி இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.![DSC00011[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/dsc000111.jpg?w=530&h=397)
Leave a comment