கடந்த மூன்று தினங்களாக காத்தான்குடி உட்பட நாட்டின் சில கரையோரப்பகுதிகளில் உயிருடனும் சடலமாகவும் கடல் உயிரினங்கள் கரையோரங்களில் ஒதுங்கிக்கொண்டு வருகின்றன.இவ்வாறு உயிருடன் கரையொதுங்கும் மீன் மற்றும் சிங்க இறால்களை மக்கள் உணவுக்காக கொண்டு சென்று சமைத்து உணவாக உட்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு கரையொதுங்கும் இவ் உயிரினங்கள் கடலுக்குள் தங்களால் பெறப்பட்டு வந்த ஒக்சிஜன் போதாமையினால் அரை உயிருடன் அவை கடலில் வாழ முடியாத சக்தியற்று கரைசேருகின்றன. இதனால் இறக்கும் தருவாயிலுள்ள இம்மீன்களை மக்கள் சாப்பிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்வது கட்டாயமாக இருக்கின்றது.
‘ரெட் டைட்’ Red Tide எனப்படும் கடல் தாவரங்கள் கடலுக்கு அடியில் வாழ்கின்றன. இவை சிவப்பு நிறமாக அல்லது பிரவுன் நிறமாக காட்சியளிக்கும். தனது சுவாசத்திற்காக தான் வசிக்கும் அப்பகுதியிலுள்ள ஒக்சிஜன்களை சுவாசத்திற்காக அதிகளவாக இத்தாவரங்கள் பெறுவதால், அப்பகுதியில் வாழும் மீன் இனங்களுக்கு தங்களின் சுவாசத்திற்கான ஒக்சிஜன் போதாமையாக இருக்கின்றன. எனவே நடுக்கடலில் வாழும் இத்தகைய மீன்கள் சுவாசத்தைத் தேடி வேறு இடங்களுக்கு இடம் பெயர்கின்றன. அதற்குள் சக்தியற்றவையாக சாகும் விளிம்பில் இயலாமையால் அலைகளால் அடிபட்டு கரையொதிங்கி வருகின்றன.
எனவே ஆரோக்கியமற்ற இத்தகைய மீன்களை மக்கள் உண்பதிலிருந்து முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறும், சம்பந்தப்பட்டவர்கள் இதுவிடயமாக பொதுமக்களுக்கு அறிவித்து உண்பதிலிருந்து அவர்களை தடுக்குமாறும் கேட்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னரும் உலகில் நடைபெற்றிருக்கின்றன.
1972ல் இங்கிலாந்திலும், 2005ல் கனடா-அமெரிக்காவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பிலும், 2011ல் அமெரிக்காவின் புலோரிடாவிலும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அலைகளற்ற தெளிவான கடல் நீராக இருப்பின் ரெட் டைட் இன் செயற்பாடுகளை இலகுவாக இனங்கான முடியும். இவை இரத்தம் போல் சிவப்பு அல்லது பிரவுன் நிறமாக நீருடன் கலந்திருக்கும். இத்தாவரங்களின் சுவாசத்தின் பின்னர் வெளியிடும் நச்சு வாயுக்களால் இவ்வாறான மாற்றங்கள் கடலில் ஏற்படுவதாக கலிபோர்னியா கடலாராய்ச்சி நிறுவனம் அப்போது தெரிவித்திருந்தது.
எனவே எங்களுக்கு இவை புதிதாக இருப்பினும் உலகில் முன்னர் இடம்பெற்றிருக்கின்றன. சுனாமி என்பதும் நாங்கள் சந்திக்கும் வரை எங்களுக்குத் தெரியாது. எனவே பற்பல பெயர்களுடன் பற்பல மாற்றங்களும் தாக்கங்களும் அழிவுகளும் உலகில் அவ்வப்போது இடம்பெறும்.
எமது கடல் எப்போதும் நீல நிறமாகத் தெரிவதால் இத்தகைய சிவப்பு நிறத்தைக் காண முடியாமல் இருக்கின்றது. இதனால்தான் தற்பொழுது கருமை நிறம்போல் எமக்குத் தோன்றுகின்றன.
எனவே இவ்வாறாக கரை ஒதுக்கப்படும் மீன்களை பொதுமக்கள் உண்பதிலிருந்து அவதானமாக இருக்கவேண்டும்.
![Lingulodinium_SD_KaiSchumann2_10x6[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/lingulodinium_sd_kaischumann2_10x611.jpg?w=530&h=338)
Leave a comment