நேற்றும் இன்றும் சுவையான இலவச மீன் உணவு!

-MJ

நேற்று காத்தான்குடியிலும் நாட்டின் ஏனைய சில கரையோரப் பகுதிகளிலும் கரையொதிங்கி வந்த மீன்களை மக்கள் ஆர்வத்துடன் தங்களது இல்லங்களுக்கும் உணவகங்களுக்கும் கொண்டு சென்றனர்.

இந்தவகையில் நேற்று காத்தான்குடியில் அதிகமானவர்களின் வீடுகளில் குறித்த மீன் கறிகளும் பொறியல்களும் மதிய உணவையும் இரவு உணவையும் சிறப்பித்துச் சென்றிருந்தன.

சந்தையில் கொள்வனவு செய்து சமைத்துண்ணும் வழமையான மீன்கறிகயைப் பார்க்கிலும் இம்மீன்கறி நல்ல சுவையுள்ளதாக இருந்ததாக பலர் நேற்று தெரிவித்தனர்.

இன்றும் அதிகமான வீடுகளில் இம்மீன்களே சமையலுக்கு எடுக்கப்பட்டு வருவதாகவும் பலர் தெரிவித்தனர்.

‘கடல் அண்மையில் இருந்தும் இலவசமாக மீன்களை வாழ்க்கையில் தாங்கள் என்றும் கொள்வனவு செய்ததில்லை’ என்றும்

‘நேற்றைய தினம் மறக்கமுடியாத ஒரு அதிசயமான நாளாக அமைகின்றது’  என்றும் பலர் தெரிவித்தனர்.

இவ்வாறு எடுத்துவரப்பட்ட மீன்களை சில வியாபாரிகள் கருவாடு போடுவதற்காகவும் எடுத்துச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment