யார் பொருப்பு தாரிகள்…?

சுத்தம் ஈமானின் பாதி என்றார்கள் நபி (ஸல்) அவா்கள். மனிதன் சுத்தமாக இருப்பது, சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பது என்பதானது ஒவ்வொருவருடைய தார்மீக பொருப்பும், கடமையுமாகும். இன்று நாட்டில் ஏட்பட்டிருக்கும் மிகப் பெரிய பயங்கரவாதம் டெங்காகும்.

டெங்கினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு அடிப்படைக்  காரணம் சுற்றுச் சூழல்  மோசமாக இருப்பதுதான். இதற்கு ஒவ்வொருவரும் பதில் சொல்லியாக வேண்டும்.

ஒரு ஊரினைப் பொருத்த மட்டில் சுற்றுச் சூழல் மிக மோசமாக இருப்பதற்கு ஒரு வகையில் அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகச் சீர்கேடும் மிகப் பிரதானமான காரணமாகும்.

1) குப்பை கூழங்களை உரிய முறையில் அகற்றாமை.

2) காண்களில் நீர் தேங்கி கிடப்பதனால்.

3) இது தொடா்பாக மக்களுக்கு விழிப்பு  நடவடிக்கைகள் மேற் கொள்ளாமை.

4) இது விடயத்தில் மீருபவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற் கொற்கொள்ளாமை.   என்று பல்வேறு விடயங்களை எழுதிக் கொண்டு போகலாம்.

எனவே வருகின்றது ‘மாரி மழை காலம்’  இது விடயத்தில் நாம் அக்கரையுடன் கவணம் செலுத்துவது எங்கள் ஒவ்வொருவா் மீதும் ‘பா்ழ்அய்ன்’ ஆகும்.

நாம் ஒவ்வொருவரும் பொருப்பு தாரிகள். எமது பொருப்புகள் பற்றி நாளை மறுமையில் விசாரனை உண்டு.என்பதனை மனதில் கொண்டு செயல்படு வோமாக.

கதீஜா பைறுஸ்

புதிய கா-குடி

Published by

Leave a comment