விருப்புவாக்கை ஒழிக்க அரசு எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது

இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயக நீரோட்டத்திற்கு இழுக்கை ஏற்படுத்திய விருப்பு வாக்கு முறைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இன்றைய அரசாங்கம் கடந்த வியாழக்கிழமையன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய உள்ளூராட்சி தேர்தல் சட்டத்திருத்த மசோதா சாவுமணி அடித்து இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய் வதற்கு ஒரு புதிய யுகத்தை ஆரம்பித்தது.

1977ம் ஆண்டில் அதிகப் பெரும்பான்மை ஆசனப் பலத்துடன் பாராளு மன்ற தேர்தலில் வெற்றியீட்டிய அதிகார போதையில் அன்றைய பிரதம மந்திரியாக இருந்த ஜே.ஆர். ஜயவர்தன, ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் பல தசாப்தங்களுக்கு தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற சுயநல நோக்கத்துடன் 1978ம் ஆண்டில் நாட்டின் அரசியல் சாசனத்தை மாற்றி ஜனாதிபதி முறையிலான ஆட்சி அமைப்பை இலங்கையில் ஏற்படுத்தினார்.

இந்த அரசியல் சாசனம் பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்த பிரதமமந்திரியின் நிறைவேற்று அதிகாரத்தைப் பறித்து, அவ்வதி காரத்தை ஜனாதிபதி ஒருவருக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. தனது கட்சி தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமாயின் தொகுதிவாரி யாக பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடும் பழைய முறையை இல்லாமல் செய்ய வேண்டுமென்றும், அதன் மூலமே ஐக்கிய தேசியக் கட்சி என்றும் அதிகாரத்தில் இருக்க முடியுமென்ற சிந் தனையில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, ஒரு கட்சியின் வேட் பாளர் மற்ற கட்சியின் வேட்பாளர்களை ஒரே தொகுதியில் நேருக்கு நேர் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெறுவது, தன் கட்சியினால் எதிர்காலத்தில் நிறைவேற்ற முடியாத ஒரு பெரும் சாதனையாக இருந்ததனால் இந்த தேர்தல் முறையை இரத்துச் செய்து விருப்பு வாக்கு தேர்தல் முறையை அறிமுகம் செய்தார்.

ஜே. ஆர். ஜயவர்தனவின் இந்த சுயநல நோக்கத்துடனான செயற் பாட்டினால் எங்கள் நாட்டின் ஜனநாயக தேர்தல் முறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. ஒரு மாவட்டத்தில் ஒரே கட்சியைச் சேர் ந்த பலர் போட்டியிடுவதனால் அது சர்வகட்சி தேர்தலை விட மாறுபட்ட பயங்கர விளைவுகளை ஏற்படுத்தின. முன்னர் தேர்தல் வன்முறைகள் ஒரு கட்சிக்கும், அக்கட்சியை எதிர்க்கும் மற்றைய கட்சியினருக்கும் இடையில்தான் ஏற்படும்.

ஆனால், இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையினால் ஒரே கட்சியின் வேட்பாளர்கள் எதிரணி கட்சி வேட்பாளர்களை தாக்கு வதை விட ஒரே கட்சி வேட்பாளர்களுக்கிடையில் உடல் ரீதியி லான மற்றும் கொள்கை அடிப்படையிலான மோதல்கள் ஏற்பட்டு அவை இரத்தக் களரியாகவும் பல சந்தர்ப்பங்களில் மரணங்களிலும் முடிவுற்றன.

இந்த விருப்பு வாக்களிப்பு முறையில் ஒரு பிரதேசத்து மக்கள் தங்க ளின் பாராளுமன்ற பிரதிநிதி யார் என்பதை கண்டுகொள்ள முடி யாத அவலமும் ஏற்படுகின்றது. இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையை அன்று அமுல்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியே இப்போது இந்த விருப்பு வாக்கு முறையில் ஏற்படும் அநீதிகளை நன்கு உணர்ந்து அதனை வெறுக்கின்றது. இதனால் தான் வியாழக் கிழமையன்று பாராளுமன்றத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்ட விவாதத்தில் உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இதனை நாம் முழு மனது டன் ஆதரிக்கின்றோம். உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தை திருத்தியது போன்று மாகாணசபை மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் சட்டங்களும் திருத்தப்பட்டு, இத்தேர்தல்களிலும் விருப்பு வாக்கு முறையை அமுலாக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய அமைச்சரும், பின்னர் பிரதம மந்திரி பதவியை வகித்தவருமான இன்றைய எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 34 வருடங்களுக்கு பின்னராவது இந்த ஞானம் பிறந்திருப்பது உண்மையிலேயே பாராட்டக்கூடிய விடய மாகும். தேர்தல் காலத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கும் தேர் தல் பித்தலாட்டங்கள் உச்சகட்டம் அடைவதற்கும் இந்த விருப்பு வாக்கு முறைமையே பிரதான காரணமாகும்.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து, மக்களிடையே ஒற்றுமையையும், நல்லெண்ணத்தையும் வளர்த்து வரும் அதே வேளையில், நாட்டின் அபிவிருத்திப் பணிகளை சிறந்த முறையில் முன்னெடுத்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இன்றைய அரசாங்கத்திற்கு தேர்தல் சட்டத்தை திருத்தி அமைப்பது ஒரு பெரும் சவாலாக இருந்தது.

இந்த சவாலை சிறந்த முறையில் வெற்றி காண்பதற்கு பாராளு மன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டணி, ஜே.வி.பி போன்ற சகல கட்சிகளும் முழு மனதுடனான ஆதரவை அளித்திருப்பது இந்நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் மகிழ்ச்சியடைவதற்குரிய ஒரு விடயமாகும்.

கடந்த 34 வருடங்களாக எங்கள் நாட்டின் தேர்தல் முறையை பிடித் திருந்த விருப்பு வாக்குகள் என்ற அசுத்த ஆவியை ஒழித்துக் கட்டுவதற்கு இன்று எங்கள் நாட்டின் மக்களும், அரசியல் கட்சி களும் ஓரணியில் திரண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுடன் ஆரம்பமாகும் விருப்பு வாக்கு ஒழிப்பு செயற்பாடு பின்னர் மாகாண சபைகள் மற்றும் பாராளு மன்ற பொதுத் தேர்தல்களிலும் அமுலாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டக்கூடிய விடயமாகும்.

-தினகரன்

Published by

Leave a comment