கவிஞர்களுக்கு ஓர் சந்தர்ப்பம்

உங்கள் மனங்களில் சுரக்கும் எண்ணங்களை பேனா மைகொண்டு காகிதத்தில் பதித்து, கைவிரல்கொண்டு  அழுத்தி கணனித்திரையில்  பதிவேற்றி மின்னஞ்சில் தூதாய் அவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்.

உங்களின் நான்கு வரிகள் கவிதைகளாய் உலகை வலம் வரட்டும். அவை மக்கள் மனங்களில் நிலைக்கட்டும். உங்களுக்கு ஓர் தனியிடம் கிடைக்கட்டும்.

ஆம், அன்புள்ள எமது இணையத்தள கவிப்பிரியர்களுக்கு,

எமது ‘உங்கள் காத்தான்குடி’ இணையத்தளத்தின் முன் பக்கத்தினை உங்கள் வரிகளால் அலங்கரிங்கள்! அவை பல்லாயிரம் உதடுகளால் சுவைபடட்டும்.

நீங்களும் கவிதைகளை அனுப்பலாம். அவை குறுங்கவிதைகளாக அமைய வேண்டும். ‘ஹைகூ’ கவிதைகளும் வரவேற்கப்படுகின்றன. சொந்த ஆக்கம் என்பதை தாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். காதல், ஆபாச கவிதைகள் பிரசுரிக்கப்படமாட்டாது.

எமது முன்பக்கத்தில் உங்கள் கவிதைகள் இடம்பெறும். சிறந்த கவிதைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இயக்குநரின் தீர்மானமே இறுதியாகும்.

நன்றி

என்றும் அன்புடன்
உங்கள் காத்தான்குடி

Published by

Leave a comment