அமெரிக்க விண்வெளி ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ‘சட்டில் எண்டீவர்’ (Shuttle Endeavor) எனும் உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆகாய விமானம் 12-10-2012 அன்றைய தினத்துடன் தனது சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறது.
மணிக்கு 17,000 மைல்களைக் கடந்து செல்லும் அதிவேக வெண்வெளி விமானமான எண்டீவர், 1992 ஆம் ஆண்டு நாசாவின் உதவியுடன் கலிபோர்ணியா விஞ்ஞான நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. இது 75 தொன் பாரம் கொண்டது.
இதுவரைக்கும் 25 தடவைகள் வெண்வெளிக்கான பயனத்திற்கு அனுப்பி மீண்டும் திரும்பி தரையிறக்கப்பட்டிருந்தது. 123 மில்லியன் மைல்களைக் கடந்த பின்னர் ஓய்வை தற்பொழுது சந்தித்திருக்கின்றது.
நேற்று முன்தினம் அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல் நகரில் இரு மணிநேரம் காட்சிக்காக வைக்கப்பட்டு, 12 மணித்தியாலங்கள் ஊர்வலமாகவும் கொண்டு செல்லப்பட்டது. இராட்சத இழுவண்டியில் கட்சிதமாக பொருத்தப்பட்டு ஊர்வலம் வந்தது.
‘இது நம்ப முடியாது’
‘இது மிக மிக இராட்சத அளவில் இருக்கின்றது’
‘நம்பவே முடியவில்லை! இந்தளவு பெரியதாக இருக்கும்என்று’
போன்ற ஆச்சரியமான வார்த்தைகள் நேரடியாக இவ்விமானத்தை கண்டவர்களிடமிருந்து பெறக்கூடியதாக இருந்தது.
இருபது வருடங்கள் தனது அபார சேவையினை நிறைவு செய்து, தற்பொழுது கலிபோர்னியா விஞ்ஞான ஆய்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. இனி ஓர் காட்சிப்பொருளாக உலக மக்கள் ‘சட்டில் எண்டீவர்’ விமானத்தைக் காணமுடியும்.
![space214-shuttle-over-houston_59481_600x450[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/space214-shuttle-over-houston_59481_600x4501.jpg?w=530&h=397)
Leave a comment