கண்டி போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதற் தடவையாக பெண்மணியொருவர் ஒரே சூலில் ஐந்து குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
கேகாலை, ஹெட்டிமுல்ல என்ற இடத்தில் வசிக்கும் திலினி ரசங்கிகா என்ற பெயருடைய 29 வயது பெண் மணியே இக் குழந்தைகளைப் பிரசவித்து இருப்பதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் ஜி. ஏ. திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.
இப்பெண்மணியின் முதல் பிரசவமே இது. இந்த ஐந்து குழந்தைகளில் மூன்று ஆண்கள் என்றும், இரண்டு பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்றுக்காலையில் தாயை சத்திர சிகிச்கைக்கு உட்படுத்தி குழந்தைகள் பாதுகாப்பாக பிரசவிக்கப்பட்டுள்ளன. தாயும் குழந்தைக ளும் நலமாக உள்ளனர் எனவும் அவர் கூறினார். இந்த ஐந்து குழந்தைகளும் ஒரு கிலோ 145 கிராமுக்கும், 535 கிராமுக்கும் இடைப்பட்டவையாக உள்ளன.
அதனால் இக்குழந்தைகள் விஷேட குழந்தைப் பராமரிப்பு பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இப்பெண்மணியின் கணவரான நிலந்த விஜயபால கேகாலை பிரதேச சபையின் உறுப்பினராவார். நிலந்த விஜயபால தம்பதியினர் திருமணம் முடித்து இற்றைக்கு மூன்று வருடங்களாகின்றன.
– தினகரன்
Leave a comment