வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெறவிருந்த அஸாட்சாலியின் கூட்டம் குறிப்பிட்ட அரசியல் பிரதிநிதியின் ஆதரவாளர்களால் நேற்று நடாத்த விடாமல் தடுக்கப்பட்டது.
என்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளினாலேயே காத்தான்குடி கூட்டம் குழப் பப்பட்டது.
அரசியல் கட்சியொன்றின் அடி யாட்களின் கைங்கரியமே இது வென்று அரசியல்வாதி அஸாத் சாலி குற்றஞ் சாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களை சந்திப்ப தற்காகவும் கல்வி விடயம் தொடர்பாகவும் கல்விக்காக உதவுவது தொடர்பில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது எனத் தெரிவித்த அஸாத்சாலி, மக்கள் சேவையிலிருந்து தன்னை ஒருபோதும் அப்புறப்படுத்த முடியாது என்றார். கூட்டத்தைக் குழப்பியவர்கள் ஏற்பாட்டாளர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.
இது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வியெழுப்பிய அவர், இந்த அச்சுறுத்தல்களுக்கு தான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்று குறிப்பிட்டார்.
![asath-sli[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/asath-sli1.jpg?w=133&h=150)
Leave a comment