பிறப்பிலேயே இரண்டு கைகளையும் வலது பாதத்தையும் இழந்த தெரணியகல தெல்ஒறுவ கனிஷ்ட பாடசாலையின் மாணவி ரஷ்மி நிமேஷா குணவர்தன ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 153 புள்ளிகளை பெற்று சித்தியடைந்தார்.
இரு கைகளும் இல்லாத நிலையில் தனது வலது காலால் இந்தப் பரீட்சையை எழுதியுள்ளார். உடல் ஊனமுற்றாலும் தனது மன உறுதியினால் பரீட்சையில் சித்தியெய்திய ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற சிறுமியை சர்வதேச பெண்பிள்ளைகள் தினத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அலரி மாளிகைக்கு அழைத்து பரிசுகளை வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம்.
(தினகரன்)
![mainpic_L[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/mainpic_l1.jpg?w=530&h=436)
Leave a comment