கடதாசி, காகிதம் என்ற உச்சரிப்பில் தினந்தோரும் மக்களின் முக்கிய தொடர்பாடல் ஊடகமாக தபால் போக்குவரத்துக்களும் எழுத்து ஊடகங்களும் இருந்த காலப்பகுதி அது.
ஆம். தற்பொழுது சுமார் 30 வயதைத்தாண்டியவர்கள் இம்முத்திரையை மறக்க மாட்டார்கள். அப்போதைய பள்ளிக்காலங்களில் முத்திரை சேகரிப்புக்களும் பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளை வெட்டி அவற்றை சேகரித்து படித்துவரும் பலக்கங்களும் அப்போதைய ஆசான்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு வந்த சிறந்த பொழுது போக்கு விடயங்களில் ஒன்றாக இவை அன்று இருந்து வந்தன.
தற்பொழுது சினிமாப்படங்களையும், படங்களின் இறுவட்டுக்களையும், விளையாட்டு (Games) இறுவட்டுக்களையும் சேமித்து சீரழிந்துவரும் மாணவர் சமூதாயத்தினரும் இளம் பராயத்தினரும் இவ்வாறான தவறான விடயங்களில் இன்று திசை திருப்பப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் 1978ம் ஆண்டு வெளியிடப்பட்ட இம்முத்திரை, 1980 களில் இருந்து பிரபல்யமடைந்து வந்தது. நெஞ்சைவிட்டு அகழாத இம்முத்திரை, வெளிநாட்டு முத்திரைகள் பல வடிவங்களில் வந்தபோதிலும் ‘தார்மீக் சமுதாயம்’ எனும் தலைப்பிடப்பட்டு அப்போதைய இலங்கை பாராளுமன்றத்தின் படத்தையும் தார்மீக சக்கரத்தையும் கொண்டமைந்த இம்முத்திரையானது, 1990 இற்கு முன்னர்வரை புழக்கத்தில் இருந்து வந்தது. அப்போதைய பெறுமதி 15 சதத்தைக் கொண்டிருந்த இம்முத்திரை சுமார் 50 சதத்தின் பெறுமதி வரைக்கும் புழக்கத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment