‘துல் ஹஜ்’ தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு

ஹிஜ்ரி 1433 ‘துல் ஹிஜ்ஜாஹ்’ ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல், ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 05.56 மணி முதல் துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கின்றது.

அவ்வாறு தலைப்பிறைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக நேரிலோ அல்லது 0115 – 234044, 2432110, 2390783 அல்லது 0777-366099 ஆகிய தொலைப் பேசி இலக்கங்கள் ஊடாகவோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறும் கேட்டுக் கொள்கிறது.

உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் சமய கலாசார திணைக்கள ஷரீஆ கவுன்ஸில், மேமன் சங்க பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள், தக்கியாக்கல், ஸாவியாக்களின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Published by

Leave a comment