பிரதான பஸ் தரிப்பு நிலையங்களில் CC TV கமராக்கள்

நாட்டிலுள்ள பிரதான பஸ் தரிப்பிடங்களில் சி.சி.ரீ.வி. கமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது. தனியார் பஸ்களிடமிருந்து கப்பம் பெறப்படுவது மற்றும் மோசடிகளை தடுக்கும் வகையில் இவ்வாறு சி.சி. ரீ.வி. கெமராக்களை பொறுத்த உள்ளதாக ஆணைக்குழு தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்தார்.

முதற்கட்டமாக மாத்தறை பஸ் தரிப் பிடத்தில் இவ்வாறு சி.சி.ரீ.வி. கெமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் நாட்டின் ஏனைய முக்கிய பஸ் தரிப்பிடங்களில் கெமராக்கள் பொறுத்தப்பட உள்ளன.

தனியார் பஸ் உரிமையாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மாவட்ட மட்டத்தில் கூட்டங்களை நடத்தி ஆராய்ந்து வருகிறது.

இதன்போது பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகள், பஸ் தரிப்பிடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கப்பம் பெறப்படல் தொடர்பான விடயங்கள் உட்பட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வரு கிறது. அண்மையில் காலி மற்றும் மாத் தறை மாவட்ட பஸ் உரிமையாளர்களு டனான சந்திப்பு இடம்பெற்றது.

-அரசாங்க தகவல் திணைக்களம்

 

 

 

Published by

Leave a comment