2500 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் ஜனாதிபதி வழங்கினார்

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளில் தொழிலுக்குச் சென்றுள்ள பெற்றோரின் 2500 குழந்தைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புலமைப் பரிசில் வழங்கினார்.

ஜனாதிபதி பதவியேற்று 2500 தினங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்று இந்த நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது.

பெரும் எண்ணிக்கையிலான மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இந்த வைபவத்தில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா- இலங்கை மத்திய வங்கி இயக்குநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment