விஞ்ஞானம், கணித பட்டதாரிகள் 1000 பேருக்கு இன்று ஆசிரிய நியமனம்

விஞ்ஞானம் மற்றும் கணித பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும்.

இந்நிகழ்வு இன்று மாலை 4.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற ஏற்பாடாகி யுள்ளதென கல்விய மைச்சர் பந்துல குணவர்தன தெரிவித் தார். தெரிவு செய்யப்பட்டுள்ள ஆயிரம் விஞ்ஞானம் மற்றும் கணித பட்டதாரி களுக்கு, தாங்கள் கடமையாற்றப்பட வேண்டிய பாடசாலையின் பெயருடன் கூடியதாகவே நியமனங்கள் வழங்கப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணித மற்றும் விஞ்ஞான பட்டதாரிகளை ஆசிரிய நியமனங்களுக்காக தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் ஏற்கனவே நடந்து முடிந்திருந்தபோதிலும், பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை கண்டறிந்து பாடசாலைகளுக்கான ஆசி ரியர்களை நியமிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டமையினாலேயே நியமனங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள தெனவும் அமைச்சர் கூறினார்.

நியமனக் கடிதங்களில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய பாடசாலைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட நிலையிலேயே நியமனங்கள் வழங்கப்படும்.

எக்காரணம் கொண்டும் இந்நியமனங்கள் மாற்றி வழங்கப்பட மாட்டாது. நியமனம் பெறும் ஆசிரியர்கள் ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களுக்கேனும் குறிப்பிட்ட பாடசாலையில் கடமையாற்ற வேண்டும். இல்லாத பட்சத்தில் அவர்களுக்கான நிய மனங்கள் ரத்துச் செய்யப்பட்டு அதற்கான சந்தர்ப்பம் வேறொரு பட்டதாரிக்கு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனையின் கீழ் குறிப்பிடப் பட்டிருக்கும் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகளுக் கென்றே விசேடமாக பட்டதாரிகள், ஆசிரியர்களாகத் தெரிவு செய்யப்படு கின்றனரெனவும் அவர் கூறினார்.

தொழில்நுட்ப பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு ஏற்கனவே நிரந்தர ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாகவே கணிதம் மற்றும் விஞ்ஞான பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் இன்று வழங்கப்படுகின்றன. விரைவில் ஆங்கிலப் பட்டதாரிகளுக்கும் ஆசிரிய நியமனங்கள் வழங்கி வைக்கப் படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

– தினகரன்

 

 

 

Published by

Leave a comment