இது குறித்து பெற்றோர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் சர்மிளா, திவ்வியா, பஸ்மிதா ஆகிய மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
வழமைபோன்று ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறிபாடசாலைக்குச் செல்லும் மாணவிகள் பாடசாலை முடிந்து இதுவரையில் வீடு திரும்பாததையிட்டு குறித்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அயலவர்களும் அவர்களை தேடி வருகின்றனர்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு:
இன்று காலை மட்டு கிரான்குளத்தில் அறநெறிப் பாடசாலைக்குச் சென்று காணாமல்போன சிறுமிகளை மட்டு மாமாங்கம் பகுதியில் வைத்து பொலிசார் மீட்டுள்ளனர்.
இவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் இவர்கள் கடத்தப்பட்டிருந்தால் இவர்களை யார் கடத்தினார்கள் என்பவற்றை அறிந்துகொள்வதற்கு பொலிசார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
-tamilwin
Leave a comment