கிழக்கு மாகாண அமைச்சரவையில் தமிழர் ஒருவர் அமைச்சராக இல்லாத குறைபாட்டை நிச்சயமாக நிவர்த்தி செய்வேன். மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார். தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் முதலமைச்சர் மாநாட்டு மண்ட பத்தில் இடம் பெற்ற நிகழ்வில் உரை யாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களிலே சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமமாக வும் நெருக்கமாகவும் வாழ்கின்ற மாகாண மாக கிழக்கு மாகாணம் திகழ்கின்றது. இம் மாகாணத்தில் நாம் எல்லோரும் எமது கலை, கலாசார பாரம்பரியத்த பேணி அவற்றை உறுதியாக கட்டிக் காக்கின்றவர் களாகவும் எமது பண்பாட்டு விழுமியங் களை பேணிப்பாதுகாக்கின்ற முக்கியமான பொறுப்பை முதலமைச்சராகிய நான் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கின்றேன்.
ஜனாதிபதி தலைமையில் நாடு பல் துறைகளிலும் வியக்கத்தக்க மாற்றங்களையும் அபிவிருத்திகளையும் கண்டு வருகிறது. இத்தேசிய நீரோட்டத்தில் கிழக்கு மாகா ணத்தில் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் வளங்களுக்குமான பலமான அத்திவாரம் இடப்பட்டுள்ளது. இருந்தும் நமது மாகாண மக்களின் பலதரப்பட்ட தேவை களையும் அபிவிருத்திகளையும் முன்னேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் அனை வருக்கும் இருக்கின்றது எனவும் கூறினார்.
-தினகரன்
Leave a comment