சௌதி அரேபியாவுக்கு ஆண் துணையின்றி ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வந்ததாகக் கூறப்படும் 170க்கும் மேற்பட்ட நைஜீரியப் பெண்களை சௌதி அரேபியா நாட்டை விட்டு வெளியேற்றியதை அடுத்து, சௌதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் செய்யும் பயணிகளை ஏற்றிச்செல்லும் அனைத்து விமானச் சேவைகளையும் நைஜீரியா இடை நிறுத்தியிருக்கிறது.
நைஜீரிய ஹஜ் பயணிகள் இவ்வாறு நடத்தப்படுவதைப் பற்றி புகார் செய்ய சௌதி அரேபியாவுக்கு நைஜீரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தலைமையில் ஒரு குழு செல்லவிருக்கிறது.
தாங்கள் தடுத்துவைக்கப்பட்டபோது, தங்களுக்கு உணவு எதுவும் தரப்படவில்லை என்றும், ஒரே ஒரு கழிப்பறையைப் பகிர்ந்துகொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தடுத்து வைக்கப்பட்ட நைஜீரியப் பெண்களில் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
ஹஜ் புனிதப் பயணம் முடிந்த பிறகு பல ஆப்ரிக்கர்கள் சௌதி அரேபியாவிலேயே தங்கி, அங்கு பிச்சையெடுப்பதன் மூலமும், விபச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலமும் பிழைப்பு நடத்துவதாக வரும் செய்திகள் குறித்து சௌதி அரேபியா நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வருகிறது.
-தகவல்: BBC/Tamil
Leave a comment