புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக செல்லும் இலங்கை ஹாஜிகளின் குழுவின் முதல் விமானம் நேற்று 26ஆம் திகதி புதன்கிழமை இங்கிருந்து புறப்பட்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார்.
சுமார் 200 இற்கும் மேற்பட்ட ஹஜ்ஜாஜிகள் சவுதியா எஸ்.வி. 789 என்ற விமானத்தில் நேற்று புதன்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு கொழும்பிலிருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தை நோக்கி சென்றனர்.
இலங்கைக்கென நிர்ணயிக்கப்பட்ட கோட்டா அடிப்படையிலேயே இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும் இதற்கமைய இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 2800 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏனைய ஹாஜிகள் தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் மக்கா செல்லவுள்ளனர். எதிர்வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் வரை இலங்கையிலிருந்து ஹாஜிகளை ஏற்றிச் செல்லும் விமான சேவைகள் இடம்பெறுமெனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment