நுளம்புகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதே ஆபத்தை தடுக்கும் வழி

டெங்கு காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காயச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரஸால் ஏற்படும் ஒரு அயன மண்டலத் தொற்று நோய் ஆகும். இது நுளம்புகளால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடுமை காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

தொற்று நோய் தீவிரம் அடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப் போக்குக் காய்ச்சல் கடுமையான குருதிப் போக்கை ஏற்படுத்தும். மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறி குறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துக்களை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய். ஆகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் எனவும் அழைக்கப்படும்.

குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையான நோய் உண்டாகின்றது. ஆண்களைவிட கூடுதலாக பெண்கள் பாதிப்படைகின்றனர். நீரிழிவு, தொய்வு நோய் போன்ற நீண்ட கால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாதிப்பை உண்டாக்கக் கூடும்.

டெங்கு வைரஸைக் காவுகின்ற நுளம்பு ஒருவரைக் குத்துகின்ற போது நுளம்பின் உமிழ் நீருடன் தோல் பகுதிக்கு வைரஸ் செல்கின்றது. பின்னர் வெண்குருதியணுக்களுடன் ஒட்டிக்கொண்டு அவற்றின் உள்ளே நுழைந்து இனம். பெருகுகின்றது. வெள்ளணுக்கள் இதற்கு மறுவினையாக இனம் பெருகலைத் தடுப்பதற்குரிய இன்டெர்பெரோன் போன்ற சமிக்ஞைப் புரதங்களைத் தயாரிக்கின்றன. இதுவே காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுவதற்குக் காரணம் ஆகின்றது.

முதன் முதலில் நோயின் தொற் றுக்குள்ளானவர் பெரும்பாலும் அறிகுறி உணர்வு குறிகளின்றிக் காணப்படுவார். அல்லது கேடில்லாத காய்ச்சல் மட்டுமே இருக்கும். ஏனையோர் டெங்குவின் மரபார்த்த அறிகுறிகளைக் கொண்டிருப்பர்.

அவையாவன திடீரென அதிகரித்துச் செல்லும் மிகையான காய்ச்சல், தலைவலி, கண் பின்பகுதி வலி, உடல் வலி (தசை எலும்பு, வலி), களைப்பு, வாந்தி, குமட்டல், தொண்டைப்புண், சுவையில் மாற்றம், தோல் தடித்து சிவப்படைந்து சினைப்பு உண்டாதல், இவர்களுள் சிறிய பகுதியினர் (5%) நோய் கடுமையாகிக் காணப்படுவர். நோயரும்பு காலம்: நுளம்பு வைரஸை செலுத்தியதில் இருந்து அறிகுறிகள் தோற்றும் காலம் 3-14 நாட்களாகும்.

சிறார்களில் பொதுவாக இக் காய்ச்சல் 2-5 நாட்களுக்கு நீடித்து பின்னர் ஓரிரு நாட்களுக்கு இருக்காது. மீண்டும் காய்ச்சல் ஓரிரு நாட்களுக்குத் தோன்றும். பின்னர் அறவே நிற்கும். பத்து நாட்களுக்கு மேலே காய்ச்சல் நீடித்தால் அது டெங்குக் காய்ச்சலாக இருக்கும். சாத்தியக்கூறுகள் குறைவு. இப்பருவத்திலே ஏனைய அறிகுறிகள் காணப்படும் அவையாவன.

தலைவலி,

கண் பின்புற வலி,

பொதுவான உடல் வலி (தலை

வலி மூட்டு வலி),

குமட்டலும் வாந்தியும்,

வயிற்றுக்கடுப்பு,

தோல் சினைப்பு,

பசியின்மை,

தொண்டைப்புண்,

மிதமான குருதிப்போக்கு

பல் ஈறுகளில் இருந்து குருதி,

வடிதல்,

மூக்கில் இருந்து குருதி வடிதல்,

மாதவிடாய், மிகைப்பு, சிறு நீரில்

குருதி போதல், குருதிப்புள்ளிகள்,

நிண நீர்க்கணு வீக்கம்,

வெள்ளை அணுக்கள், குருதிச்

சிறுதட்டுக்கள் குறைதல்

காய்ச்சல் தொடங்கியுள்ள காலப் பகுதியில் தோல் நமைச்சல், சினைப்பு தோன்றக்கூடும். முதல் அல்லது இரண்டாம் நாள். (காய்ச்சல் மற்றும் மற்றைய அறிகுறிகள் தோன்றியதில் இருந்து) தோலின் சில பகுதிகள் சிவப்பு நிறமாக மாறும். அடுத்த 4-7 நாட்களில் சின்னமுத்து நோயில் உண்டாகும் அறிகுறி போன்று சிறிய சிறிய சிவப்பாலான புள்ளிகள் தோலில் தோன்றும் உடலிலும் பின்னர் முகத்திலும் நமைச்சல் தோன்றும். இந்நிலையில் குருதி நுண் குழாயில் கசிவு ஏற்பட்டு வாய், மூக்கு போன்ற பகுதிகளில் சிறியளவிலான குருதிப் போக்கு உண்டாகலாம்.

சிலருக்கு இந்நோய் கடுமையான பருவத்தைக் கொண்டிருக்கும். காய்ச்சல் முடிவடைந்த பின்னர் ஏற்படும் இப்பருவம் ஓரிரு நாட்கள் நீடிக்கும். இப்பருவத்தில் உடலில் நிர்மத்தேக்கம் ஏற்படும். குருதி நுண் குழாயின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரித்து கசிவு ஏற்படுவதால் நெஞ்சறை வயிற்றுப் பகுதிகளில் நீர்மத்தேக்கம் உண்டாகின்றது. இதனால் சுவாசச் சிக்கல், வயிறு புடைத்தல் ஏற்படும். இப்பருவத்தில் உறுப்புகள் செயலிழப்பு, கடும் குருதிப்போக்கு என்பன ஏற்படும். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் இது அடுத்த கட்ட நிலையான டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறிக்குச் செல்லும்.

வயிற்று வலி, வாந்தி, அமைதி யின்மை போன்றவற்றுடன் பொது வான அதிர்ச்சியின் அறிகுறிகளும் இதன்போது ஏற்படும். டெங்கு தொற்றுக்குட்பட்டவருள் ஐந்து வீதமானவரிலேயே இக்கடுமையான அறிகுறிகள் தோன்றுகின்றன.

டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸில் நான்கு குருதிப்பாய் வகைகள் உள்ளன. எனவே ஒருவருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். இதனால் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும். நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்றுமுழுதாக அழத்தல் அவசியம்.

சுற்றுப்புறத்தில் தேங்கும் நிர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப்படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சி கொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சி கொல்லி மருந்துகளால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நிர்நிலைகளை வெறுமைப் படுத்தும் முறையே மிகவும் சிறந்தது. தோலை மூடக்கூடிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது நுளம்பு வலை உபயோகிப்பது, நுளம்புக்கு எதரான களிம்பு, நுளம்புச் சுருள் போன்ற நுளம்பு விரட்டிகள் பயன்படுத்தல் என்பன பாதுகாத்துக்கொள்ள உதவும்.

-Thinakaran

 

 

 

Published by

Leave a comment