கேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்கள்!

டயானா-கேட் வில்லியம்ஸ் ஓர் வரலாற்றுப் பார்வை

-MJ

மேற்கத்தைய நாகரிகத்தால் இங்கிலாந்து அரச பரம்பரையிலும் கலாச்சார  மாற்றங்கள் அன்று ஏற்பட்டன. அது சார்ள்ஸ்-டயானா இருவரினரது மணவாழ்க்கை பிரிவில் தொடர்ந்து டயானாவின் மரணத்தில் முற்றுப்பெற்றது.

‘நாகரீகம், ஆண்பெண் கலப்பு, மதுபாணம், இசை, ஆடல் பாடல் என்று கலாச்சார சீரழிவுக்குள் தான் தொடர்ந்தும் ஈடுபட்டு பங்களிப்புச் செய்ய வேண்டி இருப்பதாலும், உலகின் ஓர் உயர்ந்த பரம்பரையில் தான் அந்தஸ்த்துடன் கௌரவமாக வாழ்ந்தாலும் கனவரைப் புரிந்து வாழ முடியாத நிலைக்கு அல்லது எனது மனதை அறிந்து வாழமுடியாத ஓர் கனவருடன் தான் ஓர் கசப்பான வாழ்வைச் சந்தித்து வருகிறேன்’ என அகால மரணமடைந்த முன்னாள் பிரித்தாணிய இளவரசி டயானா மனவேதனையுடன் கூறியிருந்த வார்த்தைகள் இவை.

‘பார்ட்டி, கிளப்பின் போன்றவற்றின் மூலமாக தங்களை மறந்து மது உச்சத்தில் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதே புரிவதில்லை. இதனால் தன் கனவர் பல பெண்களுடன் தனக்கு முன்னால் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதிலிருந்து ஏனைய பெண்களுடனான காதல் வரை அரச பரம்பரை மணவாழ்க்கை சென்றிருந்தது’.

இதனால் எளிமையான மனதைக் கொண்டிருந்த டயானா  மனவேதனையடைந்து அரச குடும்பத்திலிருந்து வெளியாகி உலக மக்களுடன் நன்புறவுடனும் அன்புடனும் பலக ஆசைப்பட்டார். இவ்வாறானதொரு உயர், அநாகரிக வாழ்க்கையிலிருந்து விடுபட எத்தணித்தார்.

இதற்கிடையில் இம்ரான்கான்-ஜெமீமா காதல் உலகில் பேசப்பட்டு வந்தது. இம்ரான்கானின் காதலியாக இருந்த ஜெமீமா, டயானாவின் சகோதரி. டயானா மற்றும் ஜெமீமா இருவரினரது தந்தை ஒருவரே. டயானா இளவரியாக புகழ் பெற்றிருந்தது போல், ஜெமீமாவும் பிரபல கோடீஸ்வரரின் மகள் என்ற புகழுடன் இருந்தார். ஜெமீமா-இம்ரான் காதலின் நட்பால் ஜெமீமா இஸ்லாத்தைப் படிக்க ஆரம்பித்தார். இனால் டயானாவுக்கும் இஸ்லாத்தைப் படிப்பதற்கான ஆர்வம் ஜெமீமா மூலமாக எழுந்தது.

இதன்பின்னர் 1995களில் பிரித்தாணிய பிரபல வைத்தியசாலையில் வைத்தியராக இருந்த ஹஸ்னத்கான் எனும் பாகிஸ்தான் வைத்தியருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் டயானா. இருதய சத்திர சிகிச்சை வைத்தியர், ஓர் சேர்ஜனும்கூட. இஸ்லாமிய வழிமுறைகளைக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார். இஸ்லாமிய மக்களுடன் பலகி அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஆசைப்பட்டார்.

பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாறும் அளவுக்குச் சென்றது. டயானா ஒருதலையாக ஹஸ்னத்கானை காதலிக்க ஆரம்பித்தார். தன்னை திருமணம் செய்து இஸ்லாத்தைத் தழுவி, இஸ்லாமிய அமைதி வாழ்க்கையில் இணைந்து கொள்ள ஆசைப்படுவதாக விருப்பம் தெரிவித்திருந்தார்.

எனினும் டயானாவை புரிந்து கொண்ட ஹஸ்னத்கான், இளவரிசியன் காதலை ஏற்க முடியாமல் இருந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக டயானாவின் பிடியிலிருந்து விலக ஆரம்பித்தார்.

அரச பரம்பரையும் வெறுத்து, ஹஸ்னத்கானின் காதலும் கைகூடாத நிலையில், மனவேதனையடைந்த டயானா சமூக சேவையில் ஈடுபட ஆர்வம் கொண்டார். இதனால் ஐரோப்பாவை விட்டு வெளியேறி, கிழக்காசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள ஏழைக் குழந்தைகளின் பராமரிப்புக்களை பார்வையிட்டு வந்தார். அவற்றுக்கான நிதி சேகரிப்பிலும் தன்னை அயராது ஈடுபடுத்தி வந்தார். எயிட்ஸ் ஓர் கொடிய நோய் என்பதால் அதனால் பாதிக்கப்பட்டிருந்த அப்பாவிக் குழந்தைகளையும் சமூகம் ஒதுக்கி வந்தது. எனினும் எயிட்ஸ் குழந்தைகளை கட்டியணைத்து முத்தமிட்டு உலகுக்கு ஓர் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தி, உலகுக்கு மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார்.

டயானாவின் இச்செயற்பாட்டால் இங்கிலாந்து மக்கள் பெருமைப்பட்டனர். பல இலட்சம் மக்கள் டயானாவுக்கு ஆதரவு வழங்கினர்.

இதற்கு முன்னர் 1992ல் எகிப்துக்கு விஜயம் செய்த டயானா, அங்கு இஸ்லாமிய விடயங்களை  அறிந்து படிப்பதில் ஆர்வம் காட்டினார். தனது ஆங்கில கலாச்சார செயற்பாடுகளை படிப்படியாக குறைக்க ஆரம்பித்தார். தன் தலையை ஸ்காப் கொண்டு மூடி, ஓர் முஸ்லிம் பெண்ணாக தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதன்பின்னர் இங்கிலாந்து செய்தி ஊடகங்களும் உலக செய்தி ஊடகங்களும் டயானாவை விமர்சித்து எழுத ஆரம்பித்தன. அரச குடும்பத்திற்கும் அழுத்தம் சென்றது. எனினும் தனது இறுதி வருடங்களை அரச பரம்பரையை விட்டு, வெளிநாடுகளில் டயானா களித்து வந்ததால் அரச பரம்பரைக்கு தடுக்கமுடியாமல் போனது.

இதன் பின்னர் 1995ல் டோடி பயட் என்ற ஓர் எகிப்தின் செல்வந்தருடன் சந்திக்கும் சந்தர்ப்பம் டயானாவுக்குக் கிடைத்தது. இவர் இங்கிலாந்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களில் ஒருவர். உயர் வர்த்தகரான பயட் இன் மகன் டோடியுடன் பின்னர் டயானாவின் காதல் தொடர்ந்தது. அவர் விபத்தில் மரணிக்கும் வரை அதாவது ஆகஸ்ட் 31, 1997ல் இறுதி நேரம்வரை ஓர் முஸ்லிம் ஒருவருடன் தனது காலத்தைக் களித்தார். மரணமும் ஒன்றாகவே இருவரையும் தழுவிச் சென்றது.

இதன் பின்னர் இங்கிலாந்து மக்கள் இஸ்லாத்தின் பக்கம் ஆர்வம் காட்டினர். முஸ்லிம் நாடுகளுக்கு உல்லாசப் பிரயாணம் சென்று, அங்குள்ள முஸ்லிம்களின் அமைதி வாழ்க்கை முறையை அறிய ஆர்வம் கொண்டனர். குர்ஆனை வாங்கிப் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டனர்.

இன்றைய பிரித்தாணிய அரச பரம்பரைக்குச் சொந்தமான புதிய ஜோடியான வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி கேட் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் சென்றவாரம் மலேசியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அங்கு பள்ளிவாயலுக்கும் விஜயம் செய்தனர். தங்களது உயர்ரக காலணிகளை கழற்றிவிட்டு பள்ளிவாயலுக்குள் நுழைந்தனர். கேட் வில்லியம்ஸ் தனது தலையை ஸ்காப் கொண்டு மூடி, முஸ்லிம் பெண் போன்று அன்றைய நாளை மலேசியாவில் களித்தார்.

இத்தோற்றத்தை பத்திரிகை மூலமாக அறிந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 1992 டயானா கெய்ரோவில் இப்படித்தான் காட்சி தந்தார். அதன் பின்னரே அவர் இஸ்லாத்தின்பால் கவனம் செலுத்துவதற்கு அவரைத் தூண்டியது என்றும், அதே நினைவுகளையே இன்றைய கேட் வில்லியம்ஸ் யின் காட்சிகளும் தங்களுக்கு ஞாபகப்படுத்திச் செல்வதாகவும் இங்கிலாந்துப் பத்திரிகைகள் கடந்தவாரம் குறித்த படத்துடன் தலைப்பிட்டிருந்தன.

இதனால் டயானா போன்று இவரும் இஸ்லாத்தைப் படிக்க ஆரம்பித்து விடுவாரோ என்ற அச்சம் அரச பரம்பரையில் இன்று எழுந்துள்ளது. அது மாத்திரமன்றி, பத்திரிகைகளும் டயானாவின் மேற்படி சமபவங்களுடன் தொடர்பு படுத்தி, கேட் வில்லியம்ஸ் ஸ்காப் அணிந்ததை அச்சத்துடனும் சந்தேகங்களுடனும் இன்று எழுதி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment