![hunais-mp[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/hunais-mp1.jpg?w=87&h=150)
புத்தளத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தொன்றில் காயமடைந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் 6 பேரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இவர்களின் வாகனம், காலை 6.30 மணியளவில் புத்தளம், பத்துளுஓயா பகுதியில் பாதையை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-tamilmirror
Leave a comment