இஸ்லாத்தை அவமதிக்கும் வீடியோவுக்கு புத்தசாசன சமய விவகார அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பில் மதச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய விவகார பதில் அமைச்சர் டபிள்யூ.எம்.கே.டி.எஸ். குணவர்தன கூறியதுடன், மத உணர்வுகளை புண்படுத்துவதற்கு எந்த தனிநபருக்கோ ,குழுவுக்கோ அனுமதி இல்லை எனத் தெரிவித்தார்.
‘இந்த வீடியோவை தயாரித்தவர்கள் அதை வாபஸ் பெற வேண்டும் என நாம் கோருகிறோம். எந்த மதத்தையும் அவமதிப்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை’ எனவும் அவர் கூறினார்.
Leave a comment