ஐந்து நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினரின் பங்குபற்றுதலுடன் தொப்பிகல, வாகரை பிரதேசங்களில் ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த முப்படைகளின் கூட்டு இராணுவ பயிற்சிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன.
சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த 39 முப்படை அதிகாரிகளும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 2500 வீரர்களும் இந்த கூட்டுப் பயிற்சிகளில் பங்குபற்றினர்.
‘நீலத் தீவு’ மற்றும் ‘சிவப்பு தீவு’ என்ற இரண்டு நாடுகளுக்கு இடையில் இடம் பெறும் யுத்தம் என்ற அடிப்படையில் தொப்பிகல (குடும்பிமலை) வாகரை, புன்னக்குடா ஆகிய பிரதேசங்களில் கடந்த ஒரு மாத காலமாக இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி இடம்பெற்று வந்தது.
வாகரை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிறைவு நாள் பிரதான கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட முப்படைகளின் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
இதேவேளை, கரையோர பிரதேசசத்தில் அமைக்கப்பட்டிருந்த எதிரிகளின் தகவல் தொடர்பு மையம் ஒன்றை தாக்கியளிக்கும் வகையிலான விஷேட பயிற்சி நேற்று அதிகாலை ஏறாவூர் புன்னக்குடா கடற் பரப்பிலும் அதனை அண்டிய கரையோர பிரதேசத்திலும் இடம்பெற்றது.
இந்த விஷேட பயிற்சி நடவடிக்கையில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவத்தின்கொமண்டோ படைப் பிரிவுகள் பங்குபற்றின.
தரை வழியாக இராணுவத்தினர் முன்னேறிய அதேசமயம், விமானப் படையின் கபீர் ரக தாக்குதல் விமானம் மற்றும் எம்.ஐ.-24 ஹெலிகொப்டர்கள் மூலம் வானிலிருந்து குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தியன. அத்துடன், கடற்படையின் கப்பல்கள் வேகப் படகுகளின் உதவிகளுடன் கடல் வழி தாக்குதல்களை நடத்தி அந்தப் பிரதேசத்தை தாக்கியழித்து கைப்பற்றும் விதத்தைஇந்த பயிற்சியின் போது செய்து காண்பித்தனர். எதிரி நாடான சிவப்பு தீவை தாக்கியளிக்கும் பயிற்சி நடவடிக்கைக்கு விமானத்தாக்குதல் மற்றும் ஆட்டிலறி தாக்குதல் நடத்தியமை அந்தப் பிரதேசம் எங்கும் பாரிய அதிர்வு சத்தத்தைஏற்படுத்தியது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 25ம் திகதி முதல் ஆரம்பமான திட்டமிடல் மற்றும் திட்டங்களை தயாரித்தல் தொடர்பான, பயிற்சி இம்மாதம் 9ம் திகதி நிறைவு பெற்றதுடன் இரண்டாம் கட்டப் பயிற்சி இம்மாதம் 10ம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் நிறைவு பெற்றது.
சீனா,பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நான்கு நாடு களைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட இராணுவக் குழுக்கள் இந்தப் பயிற்சியில் பங்குபற்றியதுடன் இந்தியாவின் இரு உயர் அதிகாரிகள் பார்வையாளர்களாக பங்குபற்றினர். கெரில்லா தாக்குதல், நீண்ட நாட்கள் காட்டுப் பகுதியில் பாதுங்கி தாக்குதல் நடத்துதல்மற்றும் பல்வேறு தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்பட்டமை வெளிநாட்டு இராணுவ வீரர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்திருந்தது.
யுத்தத்திற்கு பின்னரான தமது அனுபவங் களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும், தமது பயிந்சிதுறையை மேம்படுத்தும் வகையிலும் மூன்றாவது முறையாக இந்தக் கூட்டுப் பயிற்சி இலங்கையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-தினகரன்
Leave a comment