நேற்று மாலை மல்வானையில் இடம்பெற்ற டொக்டர் ஸாக்கிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சார நிகழ்வு இறுதியில் இடையூறு ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.
மல்வானை அல்முபாறக் தேசிய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற இப்பிரச்சார நிகழ்வின் பின்னர் இலங்கையின் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பைச் சார்ந்தவர் எனக் கருதப்படும் மௌலவி சிறாஜ் நஜாஹி என்பவர் மத்ஹபுகள் குறித்து கேள்வி எழுப்பினார். எதிர்பார்த்திருக்க முடியாத இக்கேள்வியினால் சாக்கீர் நாயக் பதில் அளிக்க முடியாமல் பின்வாங்கினார்.
இதனை சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிலைப்படுத்தி தங்களுக்கு வெற்றி என்பதாகக் கூறிவருகின்றனர். எனினும் சர்வ மதங்களின் வேதங்களையும் உலக அறிவையும் அல்குர்ஆன் மற்றும் நபி வழிமுறைகளை அர்த்தம் பிசகாமல் எந்த வசனம் எத்தனையாவது பாடத்தில் இருக்கின்றது என்பதை சவாலாக மேடைகளில் எடுத்தியம்பிவரும் டொக்டர் ஸாக்கீர் நாயக் அவர்கள், குறித்த கேள்வியின் போது பதிலளிக்க முடியாமல் தடுமாறியது பல கேள்விகளைத் தொடுத்துள்ளது.
இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் அதிகமானோர் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இருக்கின்றனர். இதற்கு முன்னர் வருகை தந்த தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்த பிரச்சாரகர்களால் இலங்கை முஸ்லிம்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. உண்மை தெட்டத் தெளிவாக தெரிந்தும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்து பிரச்சாரத்திற்கு வந்திருந்த வெளிநாட்டினர்களை நாடுகடத்தும் அளவுக்கு இலங்கையில் மோசமானதோர் நிலைமை அப்போது இருந்தது. எனவே, தான் மத்ஹப் பற்றி உண்மையைத் தெரிவித்தால் இலங்கை முஸ்லிம்களிடத்தில் மீண்டும் ஒரு பிளவினை ஏற்படுத்தலாம் என நினைத்து தான் அக்கேள்விக்கு விடை அளிப்பதிலிருந்து அவர் தவிர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இஸ்லாமிய பிளவுகளுக்கு அப்பால் சர்வதேச ரீதியாக தனது பிரச்சாரத்தை ஏற்படுத்தி, உலகம் முழுவதிலும் மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பதற்கு தனது தஹ்வா அமைப்பால் அயாராது பாடுபட்டு வருபவர் டொக்டர் ஸாக்கிர் நாயக் அவர்கள் என்பது உலகம் அறிந்தவிடயம்.

Leave a comment