முஸ்லிம்களை அவமதிக்கும் காணொளியை அமெரிக்க அரசாங்கம் நிராகரிக்கிறது: அமெரிக்க தூதரகம் அறிக்கை

முஸ்லிம் மக்களை அவமதிக்கும் வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் உள்ளடங்கியுள்ள விபரங்களையும் கருத்துக்களையும் அமெரிக்கா ஆணித்தரமாக நிராகரிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் காணொளி தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனும் வெளியிட்ட வாக்கு மூலத்தையே தாம் மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அமெரிக்க அரசாங்கத்துக்கும் இந்தக் காணொளிக்கும் ௭ந்தவித தொடர்பும் கிடையாது. இன்னொருவரின் சமய நம்பிக்கைக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல்களை ஐக்கிய அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு பல்லின மற்றும் பல் மத சமூகமாக செயற்படும் ஐக்கிய அமெரிக்கா மத சகிப்புத் தன்மை ௭ன்பது ஒரு நாட்டினதும் மக்களினதும் சமநிலைக்கு அத்தியவசியமானது ௭ன்று நம்பிக்கை கொண்டிருக்கிறது. சமாதானமான முறையில் தமது ௭திர்ப்பை வெளிப்படுத்துவது ஓர் அடிப்படை உரிமையாகும். ௭வ்வாறாயினும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் கூறியது போல மதத்தின் பெயரால் ஏற்படும் பகைமை மற்றும் வன்முறையை நாம் நிராகரிக்கின்றோம்.

-வீரகேசரி

Published by

Leave a comment