-MJ
முஸ்லிம்களை அவமதித்து வெளியிடப்பட்ட ‘அப்பாவி முஸ்லிம்கள்’ எனும் திரைப்படத்துக்கு எதிராக நேற்று ஜூம்ஆவின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற பிரமாண்டமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சர்வதேச ரீதியில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.
நேற்று கொல்லுப்பிட்டி பள்ளிவாயலில் இருந்து ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அணிதிரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கா தூதரகத்தை நோக்கிச் சென்றனர்.
சர்வதேச இருபது 20 கிரிக்கட் போட்டிகள் தற்பொழுது இலங்கையில் நடைபெற்றுவருவதால் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பிரயாணிகள், அதிகாரிகள் மற்றும் பங்குபற்றும் உலக நாட்டின் வீரர்கள், செய்தி ஊடகங்களும் செய்தியாளர்களும் தற்பொழுது இலங்கையில் நிலைகொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்களைத் திட்டமிட்டு அவமானப்படுத்திய இதுபோன்ற சம்பவங்கள் அண்மைக்காலங்களில் பல இடம்பெற்றிருந்தன. நேற்று இலங்கை உட்பட உலகின் பல இடங்களில் பாரிய அசம்பாவிதங்களும் எதிர்ப்புக் கண்டணங்களும் இடம்பெற்று வந்தன.
இந்தவகையில் ஐரோப்பாவிலும் பலத்த கண்டணங்கள் எழுந்துள்ளன. மத்திய கிழக்கின் அமெரிக்கா காலடித்துவத்துக்கு உட்படாத நாடுகளில் அமெரிக்கா தூதுவராலயங்கள், அமெரிக்கர்களின் வதிவிடங்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
நேற்று இடம்பெற்ற கொழும்பு ஆர்ப்பாட்டங்களும் இலங்கையின் ஏனைய இடங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும் முஸ்லிம்களின் ஒருமித்த சக்தியை வெளிக்காட்டி இருக்கின்றது. அவை சர்வதேசத்துக்கும் புரிந்துள்ளது!
![mainpic2_L[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/mainpic2_l12.jpg?w=530&h=397)
Leave a comment