உலக சிறுவர் தினத்தை (01.10.2012) முன்னிட்டு கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர்நலன்புரி அமைப்பினால் நடாத்தும் காத்தான்குடி ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கிடையில் நடாத்தும் விளையாட்டுப் போட்டி அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ. பசீர் தலைமையில் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் (5.10.2012) திகதி பாடசாலை சிறுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டியில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
இப்பாடசாலையில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளும் முதலாவது விழா இதுவாகும். இப்பாடசாலை மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்தில் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக நிருவாக உபசெயலாளர் மெளலவி எஸ்.எம்.எம். முஸ்தபா தெரிவித்தார்
தினகரன்
Leave a comment