இது ஒரு அரசியல் விளையாட்டுப் போட்டி….!

-MJ

தேர்தல் நிறைவடைந்து விட்டது. எதிரியாய் மக்களைத் திசை திருப்பிய அனைத்து அரசியல்வாதிகளும் தங்களது நோக்கங்களை கச்சிதமாக நிறைவேற்றிய பின்னர் தற்பொழுது ஒன்றிணைந்திருக்கின்றனர்.

அது அதிகௌரவ ஜனாதிபதியாக இருக்கட்டும், ஆளும் கட்சி அரசியல்வாதிகளாக இருக்கட்டும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸாக இருக்கட்டும், தமிழரசுக் கட்சியாக இருக்கட்டும் அனைவரும் இன்று ஒன்று சேர்ந்திருக்கின்றனர். முடிவு மக்கள் ஏமாந்திருக்கின்றனர்.

இப்படியான சம்பவங்கள் 08-09-2012 அன்று மாத்திரம் இடம்பெறவில்லை! இலங்கையில் அரசியல் கட்சிகள் ஆரம்பித்த காலம் தொடக்கத்திலிருந்து சிறுபான்மைக் கட்சிகள் தோற்றம் பெற்ற காலம்வரை இத்தகைய அரசியல் விளையாட்டுக்கள் இடம்பெற்று வருவது மறக்க முடியாது.

குறிப்பாக ஒரு உதைப்பந்தாட்டப் போட்டியைப் பார்க்கும் போதும் அல்லது ஓர் கிரிக்கட் போட்டியைப் பார்க்கும் போதும் குறித்த மைதானத்தில் இரு ஆதரவுகள் இருக்கும். விளையாடும் வீரர்களும், ஆதரவாளர்களும் எதிரிகளாகவே போட்டி இடம்பெறும் குறித்த நேரங்களில் மைதானத்தில் காணப்படுவர். களநிலவரமும் அப்படியே இருக்கும். போட்டி நிறைவடைந்தால் இரு அணிகளும் கை குளுக்கி பகையை மறந்து மைதானத்தை விட்டு வெளியேறுவர்.

இதுபோலதான் சுமார் 60 வருடகால இலங்கை அரசியலில், தேர்தல்கள் விளையாட்டுப் போட்டி போலவே அமைந்து வருவது இது புதிதல்ல.

குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல்களின் போது மக்களை திசைதிருப்புவதும் வென்ற பின்னர் அல்லது சந்தர்ப்பம் வரும்போது கட்சிதாவியதும் புதிதல்ல. இதனால்லேதான் ரோசமில்லாத அரசியல்வாதிகள் இன்றைய முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றனர்.

1988-89 தேர்தல்களில் முதலாவது தேர்தலைச் சந்தித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராக இருந்த ஆர். பிரேமதாச அவர்களை ஆதரித்தது. மறைந்த மு.கா. தலைவர் அஷ்ரப் அவர்கள் ஒப்பந்தத்தை செய்து பிரேமதாச அவர்களை ஆதரிக்க மக்களை கேட்டுக்  கொண்டார். மக்களும் பின்னர் ஐ.தே.கட்சிக்கும் அதன் வேட்காளர்களுக்கும் வாக்களித்தர். எதிர்க்கட்சி வேட்பாளராக இருந்த மறைந்த திருமதி சிறிமாவோ பண்டாரணாயக்காவை எதிர்;த்தார். முஸ்லிம் மக்களையும் எதிர்க்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். 1988ல் காத்தான்குடிக்கு வருகை தந்திருந்த சிறிமா அவர்களுக்கு அவரை ஓர் பெண், தாய்மை என்றும் பாராமல் கல்லடித்து விரட்டியடித்தனர்.
சுமார் 6 வருடங்களின் பின்னர் 1994ல், தான்தூற்றிய பெண்மணியின்  மகளான சந்திரிக்கா குமாரதுங்கவுடன் மறைந்த அறையில் அஷ்ரப் ஒப்பந்தம் செய்தார். மக்களை பொ.ஐ.மு யிற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். மக்களும் வாக்களித்தனர். அதன் பின்னர் இதேபோல பல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் கட்சி தாவினர்.

எமது மக்கள் 2000-2001 காலப்பகுதியில் யானையைக் கண்டு யானைக்கு வாக்களித்தனர். பின்னர் 2004ல் அரசியல்வாதிகள் கட்சிதாவியதால் மக்களும் கட்சிதாவி வாக்களித்தனர். பின்னர் 2006ல் முஸ்லிம் காங்கிரஸ் இற்கு கட்சி தாவியதால் காத்தான்குடி மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் இற்கு வாக்களித்தனர். இப்போது வெற்றிலைக்கு வாக்களித்து வருகின்றனர்.

எல்லா அரசியல்வாதிகளும் தங்களின் பேராசையை முதன் முதலில் முன்நிறுத்திய பின்னர் மக்களை உரிமை எனும்சொல்லால் அடிபணிய வைக்கின்றனர். மக்களும் ஏமாந்து வாக்களிக்கின்றனர். மக்கள் வேறுபட்டு விரோத உணர்வுகள் கலையப்படுவதற்கு முன்னரே தேர்தல் மேடைகளில் ஒருவரை ஒருவர் வசைபாடிய வேட்பாளர்களும் கட்சி உயர்மட்ட உறுப்பினர்களும் கைகுலுக்கி, விருந்தோம்பலில் பங்கெடுக்கின்றனர். ஆனால் பாவம் அப்பாவி மக்கள்!

எனவே இதுதான் இலங்கை அரசியல். ஜனாதிபதி அவர்கள் ரவூப்  ஹக்கீமை தூற்றிவிட்டு புன்னகையுடன் இன்று ஹக்கீமை அருகில் வைத்திருக்கின்றார். தேர்தல் மேடைகளில் வசைபாடிய வேட்பாளர்கள் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர்.

எனவே அரசியல் என்பது விளையாட்டே. ஒரு விளையாட்டுப் போட்டையைக் கண்டுகளித்துவிட்டு எப்படி ஆறுதலையும் மகிழ்ச்சிகளையும் அனுதாபங்களையும்  எங்களுக்குள் பகிர்ந்துகொள்கின்றோமோ அதே போலதான் இன்றைய தேர்தலின் பின்னர் உள்ள நிலவரங்களையும் ஏமாந்த மக்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

ஹக்கீம் அவர்களை தூற்றுவதாலோ விமர்சிப்பதாலோ இனிமேல் எதுவும் ஆகப்போவதில்லை. அப்படியானால்ஜனாதிபதியையும் தூற்றவேண்டும்! தேர்தல் மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸை தூற்றி, முதலமைச்சர் கனவு கண்ட கிழக்கு முஸ்லிம் அமைச்சர்களையும் தூற்றவேண்டும். எனவே காலம் கடந்து தற்பொழுது கணிந்து இருக்கின்றனது.

விளையாட்டை விளையாட்டாகவே எடுக்கவேண்டும். ஏனெனில் இலங்கை அரசியலும் ஓர் விளையாட்டுப் போட்டி போல் சென்றுவிட்டது.

 

 

 

Published by

Leave a comment