10 ரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்

அதிக வருமானம் ஈட்டும் பத்து ரயில் நிலையங்களை நவீன மயப்படுத்தி பிரயாணிகளுக்கு சகல வசதிகளையும் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படும்.

ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை, மருதானை, ராகமை, கம்பஹா, வெயாங்கொடை, அநுராதபுரம், வவுனியா, மட்டக்களப்பு, கண்டி, காலி ஆகிய ரயில் நிலையங்களே நவீன மயப்படுத்தப்படும். இதன் மூலம் சர்வதேச தரத்துக்கு ரயில் சேவைகளை வழங்கவும் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

-தினகரன்

 

 

 

Published by

Leave a comment