-MJ
எதிர்வரும் 18ம் திகதி முதல் இலங்கையில் இடம்பெறவிருக்கும் நான்காவது இருபது 20 உலகக்கிண்ணக்போட்டிகள் மிக விமர்சையாக இலங்கை மக்களையும் உலக கிரிக்கட் இரசிகர்களையும் ஆரத்தளுவிச் செல்லவிருக்கின்றன.
இலங்கை கிரிக்கட் வளிர்ச்சிக்கு 1980 களில் அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த மறைந்த ஜே.ஆர். ஜயவர்த்தனா இலங்கையில் கிரிக்கட் வளர தான்முன்னின்று பாடுபட்டார். இலங்கை அணி உலகில் இந்தளவுக்கு புகழ்பெற்றிருப்பதற்குக் காரணம் முன்னாள் ஜனாதிபதி ஜயவர்த்தனா வழங்கிய உறுதியான அத்திவாரமும் முக்கியமானதொன்றாக அமையும்.
இதேபோல்தான் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இலங்கை கிரிக்கட் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து வருகின்றார். இலங்கையில் நடைபெறவிருக்கும் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான ஊக்குப்புக்களைச் செய்து வரவதுடன், இலங்கை வீரர்களுக்கான ஆதரவு குவிப்பிலும் தனது பங்களிப்பைச் செய்துவருகின்றார்.
ஜயவர்த்தனா கிரிக்கட்டை பட்டி தொட்டி எங்கும் பரவச் செய்ததுபோல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் நாடெங்கிலும் கிரிக்கட் சவாரிகiளும், போட்டிகளையும் மேற்கொண்டு வருகின்றமையும் அவருக்கான கிரிக்கட் மீதுள்ள தன்னார்வத்தை வெளிப்படுத்துகின்றது.
2011 ம் ஆண்டு எவ்வித பிரச்சினையுமின்றி உலகக் கிண்ணப் போட்டிகளை இலங்கை சிறப்பாக நடாத்திக் காட்டியது. அதனைத் தொடர்ந்து பற்பல விளையாட்டு உறவுகளும் அரசியல் பிரதிநிதிகளின் வருகைகளும் மாநாடுகளும் இலங்கையில் நடைபெற்று வருகின்றமையும் இலங்கை பற்றிய நல்லபிப்பிராயத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் ஓர் முக்கிய தொடராகவே இவ்வுலகக் கிண்ணம் இருக்கப்போகிறது.
நான்காவது T20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் இம்முறை இலங்கையில் நடைபெற இருப்பது இலங்கை கிரிக்கட் இரசிகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியாக அமைகிறது. சென்ற வருடம் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளை நடாத்திய மூன்று ஆசிய நாடுகளுள் இலங்கையும் இருந்ததால் இலங்கையின் கிரிக்கட் இரசிகர்கள் போட்டிகளை நேரடியாகக் கண்டு மகிழும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இதேபோல்தான் மற்றுமொரு உலகக் கிண்ண போட்டிகளை நேரடியாக பார்த்து மகிழும் சந்தர்ப்பம் எம் நாட்டின் கிரிக்கட் இரசிகர்களுக்குக் கிடைக்கிறது. இப்போட்டிகள் இவ்வருடம் செப்டம்பர் மாதம் 18ம் திகதி ஆரம்பமாகின்றது. இருபத்தி ஏழு T20 போட்டிகளைக் கொண்ட ஒரு பெரும் தொடராகவே இப்போட்டிகள் அமைய இருக்கின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 
முதல் T20 உலகக் கிண்ணப் போட்டிகள் 2007ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்றன. கடந்த போட்டிகள் 2010 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்றன. T20 உலகக் கிண்ணங்களை 2007 – இந்தியா, 2009 – பாகிஸ்தான், 2010 இங்கிலாந்து ஆகிய அணிகள் முறையே வெற்றி பெற்றிருக்கின்றன. இவ் உலகக் கிண்ண போட்டிகளில் துடுப்பாட்டத்தில் மஹில ஜயவர்தன 627 ஓட்டங்களைப் பெற்றும், பந்து வீச்சில் 27 விக்கட்டுக்களை வீழ்த்தி சஹிட் அப்ரிடியும் முன்னணியில் திகழ்கின்றனர்.
முதலாவது போட்டி இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்குமிடையில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 07:30 மணிக்கு ஆரம்பமாகிறது. ஆரம்பச் சுற்று, சுப்பர்8 சுற்று, அரை இறுதி, இறுதிப் போட்டி என்ற ஒழுங்கில் இவ் உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அனைத்துப் போட்டிகளுமே இரவு பகல் ஆட்டமாகவே நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும்.
இதற்கிடையில் கொழும்பில் இருந்து போட்டி நடைபெறும் வெளி மாவட்டங்களுக்கு ஹெலிகொப்டர்கள் மூலமாக வீரர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களுக்கான தங்குமிடங்கள் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புக்குள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
2007 இல் இருந்து 2015 வரைக்குமுள்ள சர்வதேச கிரிக்கட் சம்மேளன தொடர்களை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை ESPN தொலைக்காட்சி சேவைக்கு வழங்கி இருக்கின்றது. 70 மில்லியன் மக்கள் இப்போட்டிகளை உலகில் நேரடியாகக் காணமுடியும் என குறித்த தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2014 போட்டிகள் பங்களாதேசிலும் 2016 போட்டிகள் இந்தியாவிலும் நடைபெற இருக்கின்றன.
![mainpic_L[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/mainpic_l12.jpg?w=530&h=281)
![ICC-T20-World-Cup-300x300[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/icc-t20-world-cup-300x30011.jpg?w=150&h=150)
Leave a comment