நாணயத்தாள் அச்சிடும் போது மும்மொழிகளுக்கும் முக்கியத்துவம்!

எதிர்வரும் காலங்களில் நாணயத்தாள் அச்சிடும் போது மும்மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என நிதித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தினால் மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணைகளின் போது மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.

அரசியல் சாசனத்தில் சிங்கள தமிழ் மொழிகளுக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும், நாணயத்தாள்களை அச்சிடும் போது இந்தக் கோட்பாடு பின்பற்றப்படுவதில்லை என மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையம் தெரிவித்துள்ளது.

“இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அச்சிட்டு வெளியிடப்படும் இந்த நாணயத்தாள் நாட்டின் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும் செல்லுபடியாகும்” என சிங்கள மொழியில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த வாசகம் தமிழ் மொழியிலும் குறிப்பிடப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் நாணயத் தாள் அச்சீடு செய்யும் போது மும்மொழிகளுக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment