மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு மாணவிகள் காயம்

சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி முன்பாக இடம்பெற்ற மோட் டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பாட சாலை மாணவிகள் பலத்த காயங்களுக்குள்ளாகி மயக்கமுற்ற நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளனர்.

இதே சமயம் மோட்டார் சைக்கிள் செலுத்திய ஆசிரியர் என இனம் காணப்பட்டுள்ள அப்துல் றசூல் என்பவர் பலத்த காயங்களுடன் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள அஹமட் சித்தீக் பாதிமா ஹிமா வயது 07 மற்றும் நஸார் செயினப் வயது 10 ஆகிய மாணவர்கள் இருவரும் பாடசாலை கலைந்து வெளியே வந்து மஞ்சள் கடவைப் பிரதேசத்தினூடாக பாதையை கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் அடிபட்டு இழுத்துச் செல்லப்பட்டு விழுந்த மோட்டார் சைக்கிளின் கீழ் மாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

-தினகரன்

 

 

 

Published by

Leave a comment