முஸ்லிம்களை அரசியல் சக்தியாக ஓரணியில் திரட்டியவர் மர்ஹூம் அஷ்ரஃப்

கலாபூஷணம்
எஸ்.எம். சஹாப்தீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப்பின் 12வது நினைவு தினம் நாளை 16ம் திகதியாகும்

‘நிகழ்கால அரசியல் நில வரங்களை சாணக்கிய மாகவும், சாதுர்யமாகவும் சமாளித்த தனித்துவத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் இன்றில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை (1981ல்) ஆரம்பித்து ஐந்தாண்டுகளின் பின்பு அதனை அரசியற் கட்சியாக தேர்தல் ஆணையாளரால் (1986ல்) அங்கீகரிக்கச் செய்து எத்தனையோ அரசியல் சூறாவளிகளை எதிர்நோக்கி, வெகு நிதானமாக சேவைகளை சமூகத்தின் வளர்ச்சிக்காக மர்ஹூம் அஷ்ரஃப் எடுத்துச் சென்றார்.

நம் நாடு சுதந்திரம் (1948) பெற்றது முதல் 1986 வரையிலான காலப்பகுதியில் அதாவது 38 வருடங்களாக இந்நாட்டு முஸ்லிம்கள் அரசியலில் பெரும் சக்தியாக விளங்கவில்லை.

இந்த சராசரி நிலையை மாற்றவோ மாற்றுச் சிந்தனையைத் தேடவோ எந்தத் தலைவரும் துணியாத சூழலில் தான் ஒருவர் சிந்தித்தார். செயல்பட்டார், செயற்கரியன செய்து தலைவர்களில் செம்மலாகத் திகழ்ந்து மறைந்தார். அவர்தான் 12 வருடங்களுக்கு முன் நம்மையெல்லாம் விட்டு மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்.

இங்கும் மங்குமாக சிதறிக்கிடந்த முஸ்லிம்களின் அரசியல் சக்தி களை ஒன்றுதிரட்டி, இந்நாட்டில் ஏற்படும் ஆட்சிகளை தீர்மானிக் கும் சக்திகளாக முஸ்லிம்களை பலப்படுத்தி, ஆட்சிப் பங்காளி களாக மாறி பேரம் பேசி உரிமைகளை பெறுதலே, இனிவரும் காலங்களுக்கு ஏற்புடைய அரசியல் சாணக்கியமாக அமைய முடியும் எனத் தலைவர் அஷ்ரஃப் தூர நோக்கோடு சிந்தித்துத் தெளிந்தார். அதிலே தேர்ச்சியும் பெற்று சாத்தியப்படுத்திக் காட்டினார். இதுவே தலைவர் அஷ்ரஃப் ஆற்றிய சேவைகளுள் சிறப்பானதாகும்.

பக்கத்தே இருக்கும் இன்னொரு சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மக்கள் தங்களது எதிர்காலம் குறித்து சிந்திக்க தலைப்பட்டு விட்டனர். தங்களுக்கான உரிமை பெறுவதற்காக முயற்சிக்கத் துவங்கி விட்டனர். அப்படியானால் இந்நாட்டிலுள்ள 2 ஆவது சிறுபான்மை இனத்தவர்களான முஸ்லிம்களின் நிலை என்ன?

“ஒரு சமூகம் தன்னிலையைத் தானே உணர்ந்து மாற்றத்தை நோக்கி நகராதவரை, அல்லாஹ் அச்சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை” என்ற நாம் எல்லோரும் அறிந்து வைத்துள்ள அல்குர்ஆனின் சிந்தனை, நம் தலைவர் அஷ்ரஃபின் மனதில் ஆழப்பதிந்து, சதாவும் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டே யிருந்திருக்க வேண்டும்! சன்மார்க்க இஸ்லாமே இப்படி உறைக்கும்படியாக உருப்படியான சிந்தனையை 1433 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டி ருக்கும் போது நாம் சிந்திக்காதிருப்பது பெரிய துரோகமல்லவா?

இத்தகைய குர்ஆனிய சிந்தனையும் கண்முன் அல்லாஹ் தமிழ் சகோதரர்கள் மூலம் காட்டித்தரும் சூழ்நிலையுமே, நம் தலைவர் அஷ்ரஃபை முஸ்லிம் களின் தனித்துவம் பேணி, அரசியற் பலத்தை ஒன்று திரட்டி, எதிர்காலப் பயணத்தை நிர்ணயிக்கத் தூண்டின. அதன் விளைவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியற்கட்சி.

மர்ஹ¥ம் அஷ்ரஃப் அரும்பாடு பட்டு அயராதுழைத்து முஸ் லிம்களை ஒன்றுபடுத்தினார். அரசியல் ரீதியில் சிதறுண்டு கிடக்கும் முஸ்லிம்களை சிந்திக்கத் தூண்டினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியற் கட்சியாக (1986ல்) அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து, ஆரம்ப காலத்தில் எதிர்நோக்கிய சில தேர்தல்க ளில் போதிய ஆசனங்களைப் பெறாதபோதும், இதன்வழி முஸ்லிம்கள் சிந்தித்து அரசியல் விழிப்புணர்ச்சி கண்டாலே போதும் எதிர்காலம் அவர்களுக்கு வெளுத்த வானம்போல் பளிச்செனத் திகழும் எனக் கனவு கண்டார்.

இந்தக் கனவை முஸ்லிம்கள் நிலையாகக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவர் ஆரம்பந்தொட்டு தான் மறையும் வரை, ஏறும் மேடைகள் தோறும் ஒன்றை வலியுறுத்தியே வந்தார். “ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அக்கயிற்றை விடாதவரை உங்களில் எவரும் வழிதவற மாட்டீர்கள்.”

(அல்-குர்ஆன்)

இன்றைய நாட்டு நிலைமையை சமுதாயம் எதிர்நோக்கும் சவால்களை நாம் எல்லோரும் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம்களை அரசியல் ரீதியில் தீயசக்திகள் பிரித்து வைத்துள்ளன.

தலைவர் அஷ்ரஃபின் மீது நாம் உளப்பூர்வமான நேசிப்பு கொண் டிருப்பது உண்மையானால், இன்றைய நினைவு நாளில் முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியில் ஒன்றிணைக்க உறுதிபூணுவோமாக.

இதுவே நம் தலைவர் அஷ்ரஃபுக்கு நாம் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகும்.

Thinakaran

Published by

Leave a comment