லண்டன் பராலிம்பிக்: லான்ஸ் கோப்ரல் பிரதீப் சஞ்சயவுக்கு ஜனாதிபதி கௌரவம்!

லண்டனில் இடம்பெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பில் வெண்கலப் பதக்கம் வென்ற லான்ஸ் கோப்ரல் பிரதீப் சஞ்சய தமது குடும்பத்தினர் சகிதம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார்.

இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பிரிவின் அலுவலக சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ள இவருக்கு ஜனாதிபதி 4.5 மில்லியன் ரூபா பணமும் நிலமும் பரிசளித்தார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே- பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ- விளையாட்டு அமைச்சின செயலாளர் அநுர ஜயவிக்ரம அகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆண்களுக்கான 400 மீற்றர் பரா ஒலிம்பிக் போட்டியில் பிரதீப் சஞ்சய இலங்கை சார்பில் முதலாவது பதக்கத்தினை வென்று கொடுத்ததுடன் நேற்றைய தினம் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment