-Special Report
ஐ.ம.சு.மு. கிழக்கில் வெற்றிபெற்றிருப்பினும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. இந்த வகையில் கிழக்குமாகாணசைபயின் கதாநாகனாக திகழும் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு ஜனாதிபதி நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கடந்த தேர்தல் காலங்களில் ஹக்கீம் அவர்களுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் பல இன்னல்களை விளைவித்திருந்தனர்.
தற்பொழுது ஹக்கீம் அவர்களுக்கிருக்கும் உள்ளுர் மற்றும் சர்வதேச பார்வையைத் தாங்க முடியாத மேற்படி வெற்றி பெற்ற அரசிற்கு ஆதரவான அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் ஹக்கீம் அவர்களுக்கு மறைமுகமான அழுத்தங்களை வழங்கி வருவதாக தெரிய வருகிறது.
ஹக்கீம் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்தால் தாங்கள் அரசாங்கத்திலிருந்தும் கைகட்டப்பட்வர்களாகவே மாகாணசபையில் உட்கார்ந்திருக்க நேரிடும். எனவே ஹக்கீம் அவர்கள் தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட இப்படிப்பட்ட பேராசையாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இன்னும் சில மணி நேரங்களில் ஹக்கீம் அவர்கள் தனது ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்கும் வரை சர்வதேசம் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதானது இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்துக் கிடைத்த பெருமையாகும்.
Leave a comment